ஜன நாயகன் அடுத்த அப்டேட் எப்போது?
ஜன நாயகன் படம் குறித்து...
நடிகர் விஜய் நடித்துவரும் ஜன நாயகன் படத்தின் அடுத்த அப்டேட் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். இதுதான் விஜய்யின் கடைசி படம் என அறிவித்துள்ளதால் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இப்படம் உருவாகி வருகிறது.
ஜன நாயகன் எனப் பெயரிடப்பட்ட இப்படத்தில் நடிகர்கள் பாபி தியோல், பூஜா ஹெக்டே, மமிதா பைஜூ, கௌதம் வாசுதேவ மேனன், நரேன், பிரியாமணி, பிரகாஷ் ராஜ் ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தமிழ் இயக்குநருடன் இணையும் யஷ்!
படத்தின் போஸ்டர்கள் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், நடிகை ஸ்ருதி ஹாசன் இப்படத்தில் இணைய உள்ளதாகக் கூறப்பட்டது.
இந்த நிலையில், தமிழ் புத்தாண்டான ஏப். 14 ஆம் தேதி அன்று இப்படத்தின் சிறப்பு கிளிம்ஸ் விடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.