தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் வெளியீட்டுத் தேதி!
தனுஷின் பாலிவுட் படம் குறித்து..
நடிகர் தனுஷ் நடிக்கும் பாலிவுட் படத்தின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளனர்.
நடிகர் தனுஷ் ராயன் படத்தின் வெற்றிக்குப் பின் குபேரா, இட்லி கடை படங்களில் நடித்து வருகிறார். நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படத்தை இயக்கி முடித்துள்ளார்.
அடுத்ததாக, தனுஷை இயக்க ஆனந்த் எல். ராய், போர் தொழில் இயக்குநர் விக்னேஷ் ராஜா, அமரன் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி, மாரி செல்வராஜ், லப்பர் பந்து இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து ஆகியோர் காத்திருக்கின்றனர்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: தன்பாலின காதலை சமூகம் புரிந்துகொள்ள வேண்டும்: லிஜோமோல் ஜோஸ்!
இந்த நிலையில், ஆனந்த் எல் ராய் இயக்கவுள்ள, ‘தேரே இஷ்க் மெய்ன்’ திரைப்படம் வருகிற நவ. 28 ஆம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளனர். தனுஷ் ஜோடியாக க்ரித்தி சனோன் நடிக்கிறார்.
அம்பிகாவதி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகும் இப்படத்திற்கு ஏ. ஆர். ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.