முகப்பு
செய்திகள்

விஜய் ஆண்டனி நடிக்கும் சக்தித் திருமகன்!

விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் போஸ்டர் வெளியானது...

Updated On : 29 ஜனவரி 2025, 11:21 am IST
பகிர்:

நடிகர் விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் பெயர் போஸ்டர் வெளியாகியுள்ளது.

விஜய் ஆண்டனி நடிப்பில் இறுதியாக வெளிவந்த ரோமியோ, மழைபிடிக்காத மனிதன், ஹிட்லர் படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இதனால், வெற்றிப்படத்தைக் கொடுக்கும் கட்டாயத்தில் விஜய் ஆண்டனி இருக்கிறார்.

விஜய் ஆண்டனியே தயாரிக்கும் இப்படத்திற்கு, ‘ககன மார்கன்’ எனப் பெயரிட்டுள்ளனர். இது இவரது 22ஆவது படமாக இருக்கிறது. அடுத்ததாக அக்னிச் சிறகுகள் படம் தாமதமாகியுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், விஜய் ஆண்டனியின் 25-வது படத்தின் பெயர் போஸ்டர் இன்று வெளியாகியுள்ளது. படத்திற்கு தமிழில் சக்தித் திருமகன் என்றும் தெலுங்கில் பராசக்தி என்றும் பெயரிட்டுள்ளனர். இந்தப் படத்தை விஜய் ஆண்டனி தயாரிக்க அருண் பிரபு எழுதி இயக்குகிறார். பான் இந்திய மொழிகளில் உருவாகும் இப்படம் கோடை வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

கடந்த சில நாள்களாக சிவகார்த்திகேயனின் 25-வது படத்திற்கு பராசக்தி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், விஜய் ஆண்டனி படத்திற்கு இப்பெயரிடப்பட்டுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments