மீண்டும் வில்லன்! கிரைம் திரில்லராக உருவாகும் மம்மூட்டியின் களம் காவல்!
நடிகர் மம்மூட்டியின் புதிய படம் குறித்து...
நடிகர் மம்மூட்டி நடித்துள்ள களம் காவல் படம் குறித்து இயக்குநர் பேசியுள்ளார்.
நடிகர் மம்மூட்டியின் தயாரிப்பு நிறுவனமான மம்மூட்டி கம்பெனி தன் 7-வது படமாக களம் காவல் என்கிற படத்தை தயாரித்து வருகிறது. துல்கர் சல்மானின் ’குரூப்’ படத்தின் இணை எழுத்தாளரான ஜித்தின் கே. ஜோஸ் இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.
இதில், முன்னணி கதாபாத்திரத்தில் நடிகர் விநாயகனும் வில்லனாக மம்மூட்டியும் நடித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் குறித்து பேசிய இயக்குநர் ஜித்தின், “களம் காவல் திரைப்படம் கிரைம் திரில்லர் பின்னணியில் உருவாகியுள்ளது. வழக்கம்போல, நடிகர் மம்மூட்டி வித்தியாமான கதாபாத்திரங்களில் நடிப்பதை இப்படத்திலும் தொடர்ந்திருக்கிறார். அவருடைய கதாபாத்திரம் சுவாரஸ்யமாக இருக்கும்” எனத் தெரிவித்துள்ளார்.
புழு, பிரம்மயுகம், ரோர்சாக் உள்ளிட்ட படங்களில் எதிர்மறைக் கதாபாத்திரங்களில் நடித்து கவனம் ஈர்த்த மம்மூட்டி மீண்டும் வில்லனாக நடித்துள்ளது ரசிகர்களிடம் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க: அட்லி படத்தில் 4 தோற்றங்களில் நடிக்கும் அல்லு அர்ஜுன்?
actor mammooty acts a villain role in kalamkaval a crime thriller movie directed by jithin k jose.