முகப்பு
செய்திகள்

ஓடிடியில் லால் சலாம்: இந்த வாரம் வெளியாகும் படங்கள்!

இந்த வாரம் ஓடிடி வெளியீடு குறித்து...

Updated On : 4 ஜூன் 2025, 7:45 pm IST
லால் சலாம் போஸ்டர்..
பகிர்:

ஓடிடி தளங்களில் இந்த வாரம் எந்தெந்தத் திரைப்படங்கள் வெளியாகவுள்ளன என்பதைக் காணலாம்.

லால் சலாம் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு ஜூன் 6 ஆம் தேதி சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது.

அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவிந் இயக்கத்தில் நடிகர் சசிகுமார், சிம்ரன் நடிப்பில் வெளியான டூரிஸ்ட் ஃபேமிலி படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் பார்க்கலாம்.

Advertisement

Advertisement

கிஷோர், ஸ்ருதி மேனன் ஆகியோர் நடிப்பில் வெளியான வடக்கன் திரைப்படம் ஆஹா தமிழ் ஓடிடி தளத்தில் ஜூன் 6 ஆம் தேதி வெளியாகிறது.

சன்னி தியோல், ரெஜினா கசன்ட்ரா, ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ள பாலிவுட் திரைப்படமான ஜாத் திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் நாளை(ஜூன் 5) வெளியாகிறது.

தெலுங்கு மொழிப்படமான டியர் டேடி திரைப்படம் ஈடிவி வின் ஓடிடி தளத்தில் ஜூன் 8 ஆம் தேதி வெளியாகிறது.

இப்படங்கள் அல்லாமல் கடந்த வாரம் வெளியான ஹிட் - 3 படத்தை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்திலும் துடரும் திரைப்படத்தை ஜியோ ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலும் நிழற்குடை படத்தை ஆஹா தமிழ் ஓடிடி தளத்திலும் காணலாம்.

இதையும் படிக்க: ரோலக்ஸ் சூர்யாவுக்குப் போட்டியாக எல்சியூவில் இணைந்த நிவின் பாலி!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.