ஓடிடியில் லால் சலாம்!
ரஜினிகாந்த் நடித்த லால் சலாம் ஓடிடியில் வெளியானது...
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவான லால் சலாம் திரைப்படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது.
இயக்குநர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் நடிகர்கள் ரஜினிகாந்த், விஷ்ணு விஷால், விக்ராந்த் இணைந்து நடித்த இப்படம்ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று தோல்விப்படமானலும் சுமாரான வசூலைப் பெற்றது.
மேலும், படத்தின் தோல்வியைத் தொடர்ந்து படத்தின் முக்கியமான காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் திருடுபோனதாக ஐஸ்வர்யா கூறியதால் ரசிகர்கள் விமர்சித்தனர்.
Advertisement
Advertisement
இந்த பிரச்னைகளால் இப்படம் ஓராண்டுக்கு மேலாக ஓடிடியில் வெளியாகாமல் இருந்தது.
இந்த நிலையில், லால் சலாம் திரைப்படம் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு இன்று சன் நெக்ஸ்ட் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. ஓடிடி வடிவத்தில் புதிய காட்சிகள் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தகவல்.
இதையும் படிக்க: விமானப்படை அதிகாரியாக நடிக்கும் தனுஷ்?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.