முகப்பு
செய்திகள்

அட்லி படத்தில் டிராகன்கள்?

அட்லி படத்தின் புதிய விடியோ கவனம் பெற்று வருகிறது...

Updated On : 7 ஜூன் 2025, 3:37 pm IST
பகிர்:

இயக்குநர் அட்லி - அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாகும் படத்தின் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன.

புஷ்பா - 2 படத்தின் இமாலய வெற்றிக்குப் பின் நடிகர் அல்லு அர்ஜுன் இயக்குநர் அட்லி திரைப்படத்தில் நடிக்கிறார். இப்படம் ரூ. 600 கோடி பட்ஜெட்டில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகிறது.

படத்தின் கதை முழுக் கற்பனை (fantacy) புனைகதையாக இருக்கும் எனத் தெரிகிறது. இப்படத்தில் நடிகை தீபிகா படுகோன் இணைந்ததை இன்று விடியோ வெளியிட்டு அறிவித்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த விடியோவில் கதை குறித்த அனிமேஷன் ஓவியங்கள் காட்டப்படுகின்றன. அதில், ஓநாய், டிராகன்கள் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.

இதனால், இப்படம் முழுக்க முழுக்க ஃபேண்டசி கதையாக விஎஃப்எக்ஸ் பணிகளால் நிறைந்ததாக இருக்கலாம் என்றே தெரிகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments