முகப்பு
செய்திகள்

மீண்டும் இயக்குநராகும் பிரதீப் ரங்கநாதன்!

பிரதீப் ரங்கநாதன் புதிய படத்தை இயக்கவுள்ளார்...

Updated On : 10 ஜூன் 2025, 2:16 pm IST
பிரதீப் ரங்கநாதன்
பகிர்:

நடிகர் பிரதீப் ரங்கநாதன் மீண்டும் புதிய படமொன்றை இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். அதனைத் தொடர்ந்து, லவ் டுடே படத்தை இயக்கி, நாயகனாக நடித்தார்.

அப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதால் நாயகனாகவும் அங்கீகாரம் பெற்றார். பின், இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்தார். அதுவும் அட்டகாசமான வெற்றியைப் பதிவு செய்ததுடன் ரூ. 150 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது.

Advertisement

Advertisement

அடுத்ததாக, இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்ஸுரன்ஸ் கம்பெனி படத்தில் நடித்து முடித்துள்ளார்.

தற்போது, அறிமுக இயக்குநர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடித்து வருகிறார். மமிதா பைஜூ நாயகியாக நடிக்கும் இப்படத்திற்கு, ‘டூட்’ எனப் பெயரிட்டுள்ளனர்.

இந்த நிலையில், இப்படத்தைத் தொடர்ந்து பிரதீப் ரங்கநாதன் மீண்டும் தானே இயக்கி, நடிக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாம்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments