முகப்பு
செய்திகள்

திரில்லர் கதையை எழுதிவரும் பிரேம் குமார்!

பிரேம் குமார் தன் அடுத்த படம் குறித்து பேசியுள்ளார்...

Updated On : 14 ஜூன் 2025, 4:24 pm IST
பிரேம் குமார்
பகிர்:

இயக்குநர் பிரேம் குமார் திரில்லர் கதை ஒன்றை எழுதிவருவதாகத் தெரிவித்துள்ளார்.

விஜய் சேதுபதி - திரிஷா நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற ‘96’ படத்துக்குப் பின் இயக்குநர் பிரேம் குமார் நடிகர் கார்த்தியை வைத்து மெய்யழகன் படத்தை இயக்கி அதிலும் வெற்றி பெற்றார்.

தற்போது, 96 இரண்டாம் பாகத்திற்கான கதையை எழுதி முடித்துள்ளார். ஆனால், நடிகர்களின் தேர்வு குழப்பங்களால் அப்படம் இன்னும் ஆரம்பமாகவில்லை.

Advertisement

Advertisement

இந்த நிலையில், நேர்காணலில் கலந்துகொண்ட பாடகி சின்மயி, இயக்குநர் பிரேம் குமாருக்கு அழைத்து, “96 - 2 அப்டேட் கொடுங்க” எனக் கேட்டார்.

இதற்கு, பிரேம் குமார், “96 - 2 படத்திற்கான கதை, திரைக்கதையை எழுதிவிட்டேன். ஆனால், அப்படம் கொஞ்சம் தாமதமாகும். இப்போது, திரில்லர் கதை ஒன்றை எழுதிவருகிறேன். இது, நல்ல விறுவிறுப்பான கதையாக இருக்கும்.” எனத் தெரிவித்துள்ளார்.

பிரேம் குமார் அடுத்ததாகத் திரில்லர் கதையைத் திரைப்படமாக எடுக்கவுள்ளது ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.