FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

அஞ்சான் ரீ - எடிட்டிங் திட்டத்தில் லிங்குசாமி!

அஞ்சானின் புதிய வடிவம் மறுவெளியீடாகிறது...

Updated On : 15 ஜூன் 2025, 4:40 pm IST
பகிர்:

அஞ்சான் திரைப்படத்தை மீண்டும் எடிட்டிங் செய்து மறுவெளியீடு செய்ய இயக்குநர் லிங்குசாமி திட்டமிட்டுள்ளார்.

இயக்குநர் லிங்குசாமி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்த அஞ்சான் திரைப்படம் கடந்த 2014 ஆம் ஆண்டு வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

ஆனாலும், வித்தியாசமான தோற்றத்தில் நடித்த சூர்யாவின் நடிப்பு பாராட்டுக்களைப் பெற்றதுடன் வசூலில் வெற்றிப்படமானது.

Advertisement

Advertisement

நடிகை சமந்தாவுக்கும் முக்கிய திரைப்படமாக இருந்தது. இப்படம் 10 ஆண்டுகளை நிறைவு செய்ததால், இதனை மறுவெளியீடு செய்ய லிங்குசாமி கடந்த ஆண்டே முடிவு செய்தார். ஆனால், வெளியாகவில்லை.

இந்த நிலையில், நேர்காணலில் பேசிய லிங்குசாமி, “அஞ்சான் திரைப்படத்தை ஹிந்தியில் டப்பிங் செய்ய வாங்கியவர்கள் சிறப்பாக மறுஎடிட்டிங் செய்து வெளியிட்டுள்ளனர். அதே வடிவத்தை தமிழிலும் ரீ-எடிட் செய்து மறுவெளியீடு செய்யத் திட்டமிட்டுள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

விரைவில் மறுவெளியீட்டுத் தேதியை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments