முகப்பு
செய்திகள்

ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்த பூஜா ஹெக்டே!

பூஜா ஹெக்டே ஜன நாயகனில் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்தார்...

Updated On : 16 ஜூன் 2025, 12:27 pm IST
பகிர்:

நடிகை பூஜா ஹெக்டே ஜன நாயகன் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார்.

நடிகர் விஜய் நடிப்பில் உருவாகும் 69-வது படத்தினை எச். வினோத் இயக்குகிறார். ஆக்சன் படமாகவும் அதேநேரம் சமூக பிரச்னையைப் பேசும் படமாகவும் இது உருவாகி வருகிறதாம்.

அண்மையில், பொங்கல் வெளியீடாக இப்படத்தை 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியிட உள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது.

Advertisement

Advertisement

விஜய் தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்ததாகக் கூறப்படுகிறது. இதுவே அவரின் கடைசி படமென்பதால் ரசிகர்களுக்கு இத்தகவல் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன். 22 ஆம் தேதி ஜன நாயகன் படத்தின் கிளிம்ஸ் விடியோவை வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், நடிகை பூஜா ஹெக்டே தனக்கான படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். இதனால், படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது உறுதியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.