முகப்பு
செய்திகள்

சிக்மா டப்பிங்கை நிறைவு செய்த நடிகர் சந்தீப் கிஷன்!

நடிகர் சந்தீப் கிஷன் சிக்மா படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார்...

Updated On : 1 ஜூலை 2026, 4:12 pm IST
ஜேசன் விஜய், சந்தீப் கிஷன்
பகிர்:

நடிகர் சந்தீப் கிஷன் சிக்மா திரைப்படத்தின் டப்பிங்கை நிறைவு செய்துள்ளார்.

லைகா நிறுவனத் தயாரிப்பில் முதல்வர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கிய ஆக்‌ஷன் திரைப்படமான சிக்மா வரும் ஜூலை 31 ஆம் தேதி வெளியாகுமென அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சந்தீப் கிஷன் நாயகனாக நடித்த இப்படத்தின் முதல் பாடலான சிக்மா ஸ்டைல் பாடல் வெளியாகி கவனம் ஈர்த்திருந்தது. தமன் இசையமைப்பில் உருவான இப்பாடலில் ஜேசன் சஞ்சய்யும் நடித்திருந்தார்.

Advertisement

Advertisement

நடிகர் சந்தீப் கிஷன்

சிக்மா திரைப்படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிளிக்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நிலையில், இப்படத்தின் டப்பிங் பணிகளை நிறைவு செய்துள்ளதாக சந்தீப் கிஷன் புகைப்படங்களை வெளியிட்டு அறிவித்துள்ளார்.

Actor Sundeep Kishan has completed the dubbing for the movie Sigma.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments