FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

பிரபாஸின் ராஜாசாப் டீசர்!

பிரபாஸ் நடித்த ஹாரர் படமான ராஜாசாப் படத்தின் டீசர் வெளியானது....

Updated On : 16 ஜூன் 2025, 12:06 pm IST
பிரபாஸ்
பகிர்:

நடிகர் பிரபாஸ் நடிப்பில் உருவான தி ராஜாசாப் படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

பாகுபலி படத்தின் மூலம் இந்திய அளவில் கவனம் பெற்றவர் நடிகர் பிரபாஸ். கே.ஜி.எஃப் புகழ் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் படத்தில் நடித்தார்.

சலார் படம் கடந்தாண்டு வெளியாகி ரூ.700 கோடிக்கும் மேல் வசூலித்தது. தொடர்ந்து வெளியான கல்கி ஏடி 2989 ரூ. 1000 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது.

Advertisement

Advertisement

தற்போது, ஃபீபுள் மீடியா பேக்டரி தயாரிப்பில் இயக்குநர் மாருதி இயக்கத்தில் தி ராஜாசாப் படத்தில் பிரபாஸ் நடித்து முடித்துள்ளார். ஃபேண்டசி கலந்த ஹாரர் கதையாக இப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதம் வெளியாக இருந்த திரைப்படத்தின் பணிகள் முடிவடையாத காரணங்களால் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு தற்போது வருகிற டிச. 5 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படத்தில் வில்லனாக சஞ்சய் தத் நடிக்க மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரிதி குமார் ஆகிய 3 நாயகிகள் நடிக்கின்றனர்.

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். ஹாரர் காட்சிகளுடன் நகைச்சுவை இணைந்துள்ளதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments