விஜய் சேதுபதி படத்தில் சம்யுக்தா!
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படத்தின் அப்டேட்...
விஜய் சேதுபதி - பூரி ஜெகன்நாத் படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதி நடிப்பில் இறுதியாக வெளியான ஏஸ் திரைப்படம் ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது.
இவர் நடிப்பில் அடுத்ததாக தலைவன் தலைவி வெளியாகவுள்ளது. இதனைத் தொடர்ந்து இயக்குநர் மிஷ்கினின் டிரெயின் படமும் திரைக்கு வருகிறது.
Advertisement
Advertisement
இதற்கிடையே, பிரபல தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி நாயகனாக நடிக்கிறார். இப்படம் பான் இந்திய மொழிகளில் உருவாகிறது.
இந்த நிலையில், இப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க நடிகை சம்யுக்தா ஒப்பந்தமானதைத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: பெரிய பட்ஜெட்டில் உருவாகும் ஏகே - 64?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.