கார்த்தி படத்தில் நிவின் பாலி!
கார்த்தி - 29 படத்தில் நிவின் பாலி...
நடிகர் கார்த்தியின் புதிய படத்தில் நிவின் பாலி இணைந்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நடிகர் கார்த்தி மெய்யழகன் வெற்றிக்குப் பின் வா வாத்தியார் படத்தின் வெளியீட்டிற்காகக் காத்திருக்கிறார். ஆனால், வெளியீட்டில் தாமதமாகி வருகிறது. தற்போது, இயக்குநர் பிஎஸ் மித்ரன் இயக்கத்தில் சர்தார் - 2 திரைப்படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
இதற்கிடையே, டாணாக்காரன் படத்தின் மூலம் பேசப்பட்ட இயக்குநர் தமிழ், கார்த்தியின் 29-வது படத்தை இயக்கவுள்ளதாக ட்ரிம் வாரியர்ஸ் நிறுவனம் அறிவித்திருந்தது. இதன் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், கேங்ஸ்டர் படமாக உருவாகும் இப்படத்தில் நடிகர் நிவின் பாலி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தற்போது, நிவின் பாலி தமிழில் பென்ஸ் படத்தில் நடித்துவருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: குபேரா மிக நன்றாக வந்திருக்கிறது: சேகர் கமூலா
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.