FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

லவ் மேரேஜ் டிரைலர்..! ரிலீஸ் தேதியும் அறிவிப்பு!

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் வெளியாகியது.

19 ஜூன் 2025, 12:11 pm IST
லவ் மேரேஜ் போஸ்டர்.
பகிர்:

நடிகர் விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படத்தின் டிரைலர் வெளியாகியது.

அறிமுக இயக்குநர் ஷண்முக பிரியன் லவ் மேரேஜ் படத்தினை இயக்கியுள்ளார்.

ஸ்வேதா, ஸ்ரீநிதி சாகர் தயாரிக்கும் இந்தப் படத்தில் சுஸ்மிதா பட், மீனாக்‌ஷி தினேஷ், ரமேஷ் திலக் நடித்துள்ளார்கள்.

Advertisement

Advertisement

இந்தப் படம் கோடை விடுமுறையில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது. இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார்.

ஏற்கனவே விக்ரம் பிரபு இயக்குநர் வெற்றி மாறனின் இணை இயக்குநரான சுரேஷ் இயக்கத்தில் புதிய படத்தில் நடிப்பதாக அறிவிக்கப்பட்டது.

டாணாக்காரன் இயக்குநர் தமிழ் இப்படத்தின் கதையை எழுதியுள்ளார். செவன் ஸ்கிரீன் லலித் குமார் தயாரிக்கும் இப்படத்தில் லலித்தின் மகனும் நடிகராக அறிமுகமாகிறார்.

படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க பிலோமின் ராஜ் எடிட்டராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஜூன் 27ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments