X | Singapore in India
செய்திகள்

கோலிவுட் சூப்பர்ஸ்டார்... விஜய்க்கு சிங்கப்பூர் தூதர் புகழாரம்!

தவெக தலைவர் விஜய்யை சிங்கப்பூர் தூதர் சந்தித்தது ஏன் என்று ரசிகர்களும் அரசியல் விமர்சகர்களும் கேள்வி

DIN

நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜய்யை சிங்கப்பூரின் உயர் ஆணையர் சந்தித்திருப்பது அரசியல் வட்டாரங்களில் பேசுபொருளாகியுள்ளது.

இந்தியாவில் சிங்கப்பூருக்கான தூதர் சைமன் வோங் மற்றும் சென்னையில் உள்ள சிங்கப்பூர் துணைத் தூதர் குழுவினரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரான விஜய்யை இன்று நேரில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்த சந்திப்பு குறித்து, அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்திலும் பதிவிட்டுள்ளனர்.

மேலும், கோலிவுட் சூப்பர்ஸ்டார் தளபதி விஜய்யை சந்தித்ததில் மகிழ்ச்சி. அவர் நடித்த படங்களில் உங்களுக்கு பிடித்த படம் எது என்று கேள்வியும் எழுப்பி பதிவிட்டுள்ளனர்.

மரியாதை நிமித்தமான சந்திப்பாக இது இருந்தாலும், அரசியல் விமர்சகர்களிடையே முக்கியமான ஒன்றாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நெல் ஈரப்பதம் அதிகரிப்பு கோரிக்கையை நிராகரித்தது மத்திய அரசு!

ராணிப்பேட்டை அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் மூன்று பேர் பலி

இந்தியாவில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு! கீர்த்தி சுரேஷ்

பாண்லே நெய், பன்னீா் விலை உயா்வு: புதுச்சேரி மக்கள் அதிர்ச்சி

தங்கம் விலை குறைவு! இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT