தண்டேல் ஓடிடி தேதி!
தண்டேல் படத்தின் ஓடிடி தேதி...
நாக சைதன்யா நடிப்பில் வெளியான தண்டேல் படத்தின் ஓடிடி தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான நாக சைதன்யா, சாய் பல்லவி நடிப்பில் உருவான தண்டேல் திரைப்படம் பிப்.7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் ரூ. 100 கோடிக்கும் மேல் வசூலித்து அசத்தியது. இயக்குநர் சந்து மொந்தேத்தி இயக்கிய இந்தத் திரைப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்திருந்தார்.
Advertisement
Advertisement
இதையும் படிக்க: பிரபாஸுக்கு ஜோடியாகும் இளம் பிரபலம்!
சாய் பல்லவியின் காதல் காட்சிகள் பெரிதாக ரசிக்கப்பட்ட நிலையில், இப்படம் வருகிற மார்ச் 7 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடியில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.