பைசன் காளமாடன் - முதல் பார்வை வெளியீடு!
இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்தநாளையொட்டி, பைசன் காளமாடன் படத்தின் முதல் பார்வை வெளியானது.
நடிகர் துருவ்வின் பைசன் காளமாடன் முதல் பார்வை வெளியானது.
இயக்குநர் மாரி செல்வராஜின் பிறந்தநாளையொட்டி, அவர் இயக்கியுள்ள பைசன் காளமாடன் படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது. நடிகர் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் என்ற நெப்போடிஸத்தைத் தவிர்க்கும்வகையில், முதல் பார்வை போஸ்டரில் துருவ் என்று மட்டுமே சேர்த்துள்ளனர்.
இப்படத்தில் அனுபமா பரமேஸ்வரன் நாயகியாகவும், அமீர், ரஜிஷா விஜயன், லால், பசுபதி ஆகியோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
Advertisement
Advertisement
மாரி செல்வராஜின் பரியேறும் பெருமாள் படத்தைத் தொடர்ந்து, பைசன் காளமாடன் படத்தையும் பா. ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ளது.
சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இப்படம், அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபாடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாகி வருதாகவும் சிலர் சமூக ஊடகங்களில் கூறுகின்றனர்.
இதையும் படிக்க: தமன்னா - விஜய் வர்மாவைப் பிரிய திருமணம்தான் காரணமா?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.