FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சட்ட நடவடிக்கை? விக்ரமுக்கு கெடு விதித்த வனத்துறை!

நடிகர் விக்ரமிடம் வனத்துறை விசாரணை நடத்தி வருகிறது...

Updated On : 13 ஆகஸ்ட் 2026, 3:17 pm IST
நடிகர் விக்ரம்
பகிர்:

லார் கிப்பன் குரங்குகளை வளர்த்து வந்ததற்காக வனத்துறையினர் விக்ரமுக்கு கெடு விதித்துள்ளனர்.

நடிகர் விக்ரம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில நாள்களுக்கு முன் குரங்குடன் விளையாடும் விடியோ ஒன்றைப் பதிவிட்டிருந்தார்.

லார் கிப்பன் என்ற வகை குரங்கான அது சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு கொண்டு வரப்பட்டதா? அந்தக் குரங்கை வளர்க்க அனுமதி பெறப்பட்டதா? என்று சமூக ஊடகங்களில் பலரும் கேள்வி எழுப்பிய நிலையில் அந்த விடியோவை விக்ரம் நீக்கினார்.

Advertisement

Advertisement

தொடர்ந்து வனத்துறை மேற்கொண்ட விசாரணையில், ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் விக்ரமின் உறவினர் வீட்டிற்கு அந்தக் குரங்கு எவ்வாறு கொண்டு வரப்பட்டதைக் கண்டுபிடித்தனர்.

மேலும், ஆவணங்களின்படி, மணிப்பூரைச் சேர்ந்த லைகுரம் சிங் என்பவர் 2020 ஆம் ஆண்டில் 'பரிவேஷ் 1' என்ற தளம் மூலம் 8 லார் கிப்பன்கள் (4 ஆண், 4 பெண்) தன்னிடம் இருப்பதாகப் பதிவு செய்துள்ளார். அவற்றின் பூர்வீகம் மலேசியா எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

பின்னர், 'உயிருள்ள விலங்கு இனங்கள் விதிகள் 2024'-ன் படி, படிவம்-I மூலம் லைகுரம் சிங்கிடமிருந்து ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த எஸ்.கே. கேசவநாதன் என்பவருக்கு 3 லார் கிப்பன்கள் (1 ஆண், 2 பெண்) 'தத்தெடுப்பு' என்ற பெயரில் ஜூன் 5, 2026 அன்று கைமாறியுள்ளதாக ஆவணங்களில் பதிவாகியுள்ளது.

ஆனால், படிவம்-1 தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரின் ஒப்புதலுக்காக இன்னும் காத்திருப்பு நிலையில் உள்ளது.

மற்றொரு படிவம்-I மூலம், ஆகஸ்ட் 5, 2026 அன்று கேசவநாதனிடமிருந்து சென்னை ஈஞ்சம்பாக்கத்தைச் சேர்ந்த சின்னிக் கிருஷ்ணா ரங்கநாதன் (விக்ரமின் சம்பந்தி) என்பவருக்கு 'வளர்ப்புப் பிராணி' தேவையின் பெயரில் 'வாங்கும்' முறையில் ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் லார் கிப்பன் கைமாறியுள்ளது. இந்த படிவம்-1 ஒப்புதலும் தமிழ்நாடு முதன்மை வனவிலங்கு காப்பாளரிடம் நிலுவையில் உள்ளது. ஆனால், விக்ரமுடன் விடியோவில் இருந்த குரங்குக்கு 2 - 3 வயது இருக்கலாம் என ஊகிக்கப்பட்டுள்ளதால் மலைகுரம் சிங்கிடமிருந்து வாங்கியதாக இருக்க வாய்ப்பில்லை என்கிற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்தக் குரங்குகள் எப்படி, யாரிடமிருந்து வாங்கப்பட்டன? இதற்கான சரியான ஆவணங்கள் இருக்கின்றனவா? எனக் கேள்விகளைக் கேட்ட வனத்துறை முறையான ஆணவங்களை இன்னும் 3 நாள்களுக்குள் வனத்துறையிடம் சமர்பிக்க வேண்டும் என்றும் இல்லையென்றால் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வதாகத் தெரிவித்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Forest department officials have set a deadline for Vikram regarding the rearing of Lar gibbons.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments