ஒடிசாவில் 5 அரிய உராங்குட்டான்கள் மீட்பு! இந்தியாவுக்குள் எப்படி வந்தன?
அரிய வகையைச் சேர்ந்த ஐந்து உராங்குட்டான் குரங்குகளை பற்றி..
ஒடிசாவின், பாலசோர் மாவட்டத்தில் உள்ள வனப்பகுதியில் அரிய வகையைச் சேர்ந்த ஐந்து உராங்குட்டான் குரங்குகளை வனத்துறை மீட்கப்பட்டுள்ளன.
ஒடிசா வனத்துறையில் வழக்கமான ரோந்துப் பணியின்போது இந்த உராங்குட்டான் கண்டெடுக்கப்பட்டன. உராங்குட்டான் பொதுவாக சிவப்பு-பழுப்பு நிற ரோமங்களைக் கொண்ட மரங்களில் வாழும் மனிதக் குரங்கு வகையைச் சேர்ந்தவை. இவை மலேசியா, இந்தோனேசியாவின் மலைப்பகுதிகளில் காணப்படும் அரிய வகை உயிரினங்கள்.
இந்தியப் பூர்வீகமற்ற இந்த அரிய வகை குரங்குகள் ஒடிசாவுக்கு எப்படி வந்தன? சர்வதேச கடத்தல் கும்பல் மூலம் இவை கொண்டு வரப்பட்டனவா? என வனத்துறை சந்தேகிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மீட்கப்பட்ட உராங்குட்டான்களில் மூன்று ஆண், இரண்டு பெண் என இவைகள் ஆறு மாதங்கள் முதல் ஒரு வயதுக்குள் இருக்கலாம்.
இவ்விலங்குகள் நாட்டிற்குள் கொண்டு வரப்பட்டிருக்க வேண்டும். இது சட்டவிரோதக் கடத்தல் தொடர்பான சம்பவமாக இருக்கலாம் என பிராந்திய தலைமை வனப் பாதுகாவலர் பிரகாஷ் சந்த் கூறியுள்ளார்.
ஒடிசா மாநில வன மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கணேஷ் ராம் சிங் குந்தியா கூறுகையில்,
அரிய வகை உராங்குட்டான்கள் எப்படி இங்கு வந்தன என்பதைக் கண்டறியவும், இதில் தொடர்புடையவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களை அடையாளம் காணவும் படபாய்-ரணகதா பகுதிக்கு ஒரு தனிக்குழு அனுப்பப்பட்டுள்ளது. இவ்விவகாரம் குறித்து தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மீட்கப்பட்ட உராங்குட்டான்களுக்கு முழுமையான மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவை பாதுகாப்பாக உள்ளன. காயங்கள் ஏதுமின்றி மீட்கப்பட்ட உராங்குட்டான்கள், முழுமையான மருத்துவப் பரிசோதனைக்காக நந்தன்கனன் உயிரியல் பூங்காவிற்கு மாற்றப்பட்டுள்ளன.
வனப்பகுதியில் வேறு ஏதேனும் உராங்குட்டான்கள் உள்ளனவா என வனத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர்.
The Forest Department has rescued five rare orangutans from a forest area in the Balasore district of Odisha.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.