ரெட்ரோ முதல் நாள் தமிழக வசூல் இவ்வளவா?
ரெட்ரோ முதல் நாள் வசூல் குறித்து....
நடிகர் சூர்யாவின் ரெட்ரோ திரைப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலித்த தொகை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகர் சூர்யா இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் கூட்டணியில் உருவான ரெட்ரோ திரைப்படம் நேற்று (மே.1) திரையரங்குகளில் வெளியானது.
காதல், நகைச்சுவை, சண்டை என கமர்சியல் திரைப்படத்துக்கு உண்டான அனைத்து அம்சங்களுடன் இப்படம் திரைக்கு வந்தாலும் கலவையான விமர்சனங்களையே பெற்றுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், இப்படம் தமிழகத்தில் முதல் நாள் வசூலாக ரூ. 17.75 கோடியை வசூலித்துள்ளதாகத் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
மேலும், தமிழகத்தில் முதல் நாளில் அதிக வசூலை ஈட்டிய சூர்யாவின் திரைப்படம் இதுதான் என்பதையும் குறிப்பிட்டுள்ளனர்.
இப்படம் முதல் நாளில் உலகளவில் ரூ. 35 கோடி வரை வசூலித்திருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: நடிகர் சங்க கட்டட திறப்பு விழா தேதியை அறிவித்த விஷால்!
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.