FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார்: ஏ.ஆர். முருகதாஸ்

படைத் தலைவன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸ் பேசியதாவது...

Updated On : 17 மே 2025, 3:29 pm IST
சண்முக பாண்டியன், ஏ.ஆர்.முருகதாஸ்
பகிர்:

படைத்தலைவன் இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் சண்முக பாண்டியனுக்காக ரமணா 2 எடுக்க தயார் எனப் பேசினார்.

மறைந்த நடிகர் விஜய காந்தின் இளைய மகனான சண்முக பாண்டியன் படைத் தலைவன் படத்தில் நடித்துள்ளார்.

விஜே கோம்பைன்ஸ் நிறுவனம் டாஸ் பிக்சர்ஸ் உடன் இணைந்து வழங்க, ஜகநாதன் பரமசிவம் தயாரிப்பில், இயக்குநர் அன்பு இயக்கத்தில் இந்தப் படம் உருவாகியுள்ளது.

Advertisement

Advertisement

வரும் மே 23 ஆம் தேதி உலகமெங்கும் திரைக்கு வரவிருக்கும் இந்தப் படம் காட்டு யானைகளின் வாழ்வியல் பின்னணியில் அங்கு வாழும் மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுத்துள்ளார்கள்.

இசை வெளியீட்டு விழாவில் இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேசியதாவது:

ஏராளமான படங்களில் கதாநாயகனுக்கு நிகராக வில்லன்கள் அழகாக வைக்கும் டிரெண்டை செட் செய்தவர் விஜயகாந்த்தான். அதற்கு நடிகர் ஒரு பெரிய நம்பிக்கை வேண்டும். அதை விஜயகாந்த் சார்தான் தொடங்கினார்.

எல்லோரும் விஜயகாந்த் குறித்துப் பேசி இருப்பார்கள். ஆனால் அவருடன் பணியாற்றிய அனுபவம் எனக்கு இருக்கிறது. நான் மட்டும்தான் விஜயகாந்த் சாருடன் பணியாற்றியுள்ளேன் என்று நினைத்தேன். ஆனால், கஸ்தூரி ராஜாவும் பணியாற்றியதாகக் கூறியபோது சற்று பொறாமையாக இருந்தது.

விஜய காந்தின் விடாமுயற்சியும், கடின உழைப்பும் சண்முக பாண்டியனுக்கும் வேண்டும். இவ்வளவு கம்பீரமான நடிகர் தமிழக மக்களுக்கு கிடைத்துள்ளதால் அவர்களும் கண்டிப்பாக உங்களைக் கைவிட மாட்டார்கள்.

விஜயகாந்தின் இரு கண்கள் அப்படியே சண்முக பாண்டியனுக்கு உள்ளது. சினிமாவில் வளர்ந்து வாருங்கள், கண்டிப்பாக ரமணா 2 திரைப்படம் எடுக்கலாம். இப்படம் பெரிய வெற்றி பெற வாழ்த்துக்கள் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments