முகப்பு
செய்திகள்

பிரம்மாண்டமாக நடைபெறும் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் வெளியீடு!

ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் குறித்து...

Updated On : 3 நவம்பர் 2025, 4:18 pm IST
ராஜமௌலி, பிரபாஸ்
பகிர்:

இயக்குநர் ராஜமௌலி - மகேஷ் பாபு படத்தின் போஸ்டர் வெளியீட்டு நிகழ்வு பிரம்மாண்டமாக நடைபெறவுள்ளது.

ஆர்ஆர்ஆர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்குப் பின் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி நடிகர் மகேஷ் பாபுவை நாயகனாக வைத்து புதிய படத்தை இயக்கி வருகிறார்.

இப்படம் காசியின் வரலாற்றைப் பேசும் தொன்மக் கதையாக உருவாகி வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement

Advertisement

ஒடிஷாவில் முதல்கட்ட படிப்பிடிப்பும் அடுத்ததாக, ஹைதராபாத்திலும் நிறைவடைந்த படப்பிடிப்பு தற்போது தென்னாப்பிரிக்காவில் நடைபெற்று வருகிறது.

இப்படத்திற்கு வாரணாசி எனப் பெயரிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், இப்படத்தின் முதல் போஸ்டரை நவ. 15 ஆம் தேதி வெளியிட ஹைதராபாத்திலுள்ள ராமோஜி ராவ் பிலிம் சிட்டியில் பிரம்மாண்டமாக நிகழ்வை நடத்தவும் அதன் நேரடி ஒளிபரப்பை ஜியோ ஹாட்ஸ்டாரில் வெளியிடவும் தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளதாம்.

summary

ss rajamouli and mahesh babu movie poster

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.