காந்தா படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோவில்... 
செய்திகள்

காந்தா டிரைலர் அறிவிப்பு விடியோ!

“காந்தா” திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோ வெளியாகியுள்ளது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் துல்கர் சல்மானின் ‘காந்தா’ திரைப்படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோ வெளியிடப்பட்டுள்ளது.

இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடித்துள்ள புதிய திரைப்படம் “காந்தா”. இந்தப் படம், மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படத்தில், நடிகர்கள் சமுத்திரகனி, பாக்ய ஸ்ரீ போஸ், ரானா டகுபதி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்துக்கு, இசையமைப்பாளர் ஜானு சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்தத் திரைப்படம், வரும் நவம்பர் 14 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரைலர் அறிவிப்பு விடியோவை படக்குழு இன்று (நவ. 4) வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், காந்தா திரைப்படத்தின் டிரைலர் வரும் நவம்பர் 6 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க: ஒரு படத்தை உருவாக்க இவ்வளவு உழைப்பா? ஆச்சரியப்படுத்தும் மாரி செல்வராஜ்!

The trailer announcement video of actor Dulquer Salmaan's film 'Kaantha' has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கார்குழல் கடவையே... மாளவிகா மேனன்!

அஞ்சு வண்ணப் பூவே... அனன்யா!

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது!

வெள்ளி நகைகளை வைத்து இனி கடன் பெறலாம்! முழு விவரம்

குழந்தைகளுக்கு விருது இல்லையா? பிரகாஷ் ராஜிடம் 12 வயது குழந்தை நட்சத்திரம் காட்டம்!

SCROLL FOR NEXT