கமல் பிறந்த நாளில் மறுவெளியீடாகும் 2 திரைப்படங்கள்!
கமல் படங்களின் மறுவெளியீடு குறித்து...
நடிகர் கமல் ஹாசன் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த திரைப்படங்கள் மறுவெளியீடாகின்றன.
நடிகர் கமல் ஹாசன் இறுதியாக நடித்த இந்தியன் - 2, தக் லைஃப் ஆகிய திரைப்படங்கள் வணிகம் மற்றும் விமர்சன ரீதியாக பின்னடைவைச் சந்தித்து சுமாரான படங்களாகவே எஞ்சின.
தற்போது, அன்பறிவு இயக்கத்தில் உருவாகும் தன் அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், நடிகர் கமல் ஹாசனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடித்த நாயகன் திரைப்படம் நவ. 6 ஆம் தேதியும் வேட்டையாடு விளையாடு நவ. 7 ஆம் தேதியும் மறுவெளியீடாகிறது.
கமலின் இரண்டு படங்கள் வெளியாகவுள்ளதால் அவரது ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
actor kamal haasan's 2 movies rereleased soon
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.