சிவா மறுவெளியீடு: சிரஞ்சீவி பாராட்டு, ராம் கோபால் வர்மா மன்னிப்பு!
மறுவெளியீடாகும் ராம் கோபால் வர்மாவின் சிவா திரைப்படம் குறித்து...
பிரபல தெலுங்கு இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் முதல் திரைப்படமான ’சிவா’ மீண்டும் திரைக்கு வருகிறது.
இந்தப் படத்தில் நாகார்ஜுனா நாயகனாகவும் அமலா நாயகியாகவும் ரகுவரன் வில்லனாகவும் நடித்துள்ளார்கள்.
இந்தப் படம் வெளியான சமயத்தில் மிகப்பெரிய பேரலையை ஏற்படுத்தியது.
Advertisement
Advertisement
புதுமையான காட்சி அமைப்புகள், சிங்கிள் ஷாட்டுகள் என இந்திய சினிமாவையே புரட்டிபோட்டது எனலாம். தெலுங்கு சினிமாவில் மிக முக்கியமான படமாகவும் இன்றளவும் இருந்து வருகிறது.
இந்தப் படம் வரும் நவ.14ஆம் தேதி திரையில் புதுப் பொலிவுடன் வெளியாகவிருக்கிறது.
இந்தப் படம் குறித்து புகழ்ந்து பேசிய நடிகர் சிரஞ்சீவி ஒரு விடியோவையும் வெளியிட்டுள்ளார்.
அதனைப் பகிர்ந்த இயக்குநர் ராம் கோபால் வர்மா, “நன்றி சிரஞ்சீவி அவர்களே, நான் தெரியாமல் எப்போதாவது உங்களை புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள். உங்கள் பெரிய மனதிற்கு மீண்டும் ஒருமுறை நன்றி” எனக் கூறியுள்ளார்.
தற்போது, ராம் கோபால் வர்மா மனோஜ் பாஜ்பாயி உடன் இணைந்து புதிய படத்தினை இயக்கி வருகிறார்.
Famous Telugu director Ram Gopal Varma's debut film 'Shiva' is making a comeback.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.