FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

ரசிகர்கள் என் கன்னத்தைக் கிள்ளியதில் தவறில்லை..! நடிகை ரச்சிதா ராம் விளக்கம்!

கன்னட நடிகை ரச்சிதா ராம் தன்னிடம் ரசிகர்கள் நடந்துகொண்ட விதம் குறித்து பேசியிருப்பதாவது...

கன்னத்தைக் கிள்ளிய ரசிகர்கள். நடுவில் ரச்சித்தா. - படங்கள்: எக்ஸ்/ நம்ம கேஎஃப்ஐ
பகிர்:

கன்னட நடிகை ரச்சிதா ராம் தன்னிடம் ரசிகர்கள் நடந்துகொண்ட விதத்தில் தவறில்லை என்றும் அன்பினால் செய்தது என விளக்கம் அளித்துள்ளார்.

கன்னட திரைத்துறையைச் சேர்ந்தவரான ரச்சிதா ராம் தொடக்கத்தில் தொலைக்காட்சித் தொடர்களில் நடித்து பின் 2013 ஆம் ஆண்டு வெளியான புல்புல் என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவுக்கு அறிமுகமானார்.

அந்தப் படத்திற்காக சிறந்த நடிகைக்கான பிலிம்பேர் விருது உள்பட பல விருதுகளை வென்றார். இருபதுக்கும் அதிகமான திரைப்படங்களில் நடித்து கன்னட ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளார்.

Advertisement

Advertisement

ஐ லவ் யூ படத்தில் நடிகர் உபேந்திராவுக்கு ஜோடியாக நடித்து அசத்தினார். இன்ஸ்டாகிராமில் அதிக ஃபாலோயர்களை வைத்திருக்கும் கன்னட நடிகைகளில் ஒருவராகவும் இருக்கிறார்.

இந்த நிலையில், ரச்சிதா ராமின் பிறந்த நாளைக் கொண்டாடும் வகையில் அவரது ரசிகர் மன்றத்தினர் நள்ளிரவில் சந்திப்பை நிகழ்த்தினர். இதில் கலந்துகொண்ட ரச்சிதா கேக் வெட்டி தன் மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டார். மேலும், அவருடன் இணைந்து ரசிகர்கள் புகைப்படமும் எடுத்துக்கொண்டனர்.

அப்போது ரசிகர்கள் பலர் ரச்சிதாவுடன் புகைப்படம் எடுத்தவுடன் திரும்பி அவரின் கன்னத்தைக் கிள்ளினார்கள். இதனைச் சற்றும் எதிர்பார்க்காத ரச்சிதா ஒரு கணம் பதற்றமாகி பின் புன்னகைத்தார்.

இது சமூக வலைதளத்தில் பேசுபொருளானதும் இதற்கு நடிகை ரச்சிதா விளக்கம் அளித்துள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:

என்னிடம் எனது நண்பர்களும், ‘உனக்கு கோபம் வரவில்லையா?’ என இது குறித்து கேட்டார்கள். நான் அவர்களிடம் சொன்னது ரசிகர்களின் அன்பு மட்டுமே. அதில் தவறான நோக்கம் எதுவும் இல்லை. அன்பினால் க்யூட்டாக குழந்தையை கொஞ்சுவதுபோல செய்வதுபோல செய்தார்கள். இதில் தவறான தொடுதல் இல்லை. அப்படி எதாவது இருந்தால் நானே கண்டித்திருப்பேன். ஆனால், தூய்மையான அன்பினால் செய்வதை எப்படி கண்டிப்பது? உண்மையில் எனக்கு மிகவும் பிடித்திருந்தது என்றார்.

சில ரசிகர்கள் சரியாக புகைப்படம் எடுக்காமல் சென்றாலும் அவர்களை மீண்டும் அழைத்து சரியாக எடுத்துக்கொள் என்று ரச்சிதா அன்பைப் பொழிந்திருக்கிறார். சமூக வலைதளத்தில் இந்தக் காட்சிகள் கவனம் ஈர்த்து வருகின்றன.

summary

"There is nothing wrong with fans pinching my cheek!" – Actress Rachita Ram clarifies.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments