FOLLOW US

ON GOOGLE DISCOVER

✕
முகப்பு

காங்கிரஸை நம்புவது முட்டாள் தனம்: முதல்வர் விஜய்யை எச்சரித்த ராம் மாதவ்

காங்கிரஸை நம்பி ஆட்சி புரிவது முட்டாள் தனம் என தமிழக பாஜக பொறுப்பாளார் ராம் மாதவ் எச்சரித்திருப்பது குறித்து...

49 வினாடிகள் முன்பு
பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழக பாஜக பொறுப்பாளாருமான ராம் மாதவ் - டிஎன்எஸ்
பகிர்:

சென்னை: காங்கிரஸை நம்பி ஆட்சி புரிவது முட்டாள் தனம் என முதல்வரும், தவெக தலைவருமான சி. ஜோசப் விஜய்யை எச்சரித்த பாஜக தேசிய துணைத் தலைவரும் தமிழக பாஜக பொறுப்பாளாருமான ராம் மாதவ், காங்கிரஸ் "நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல"; அது தனக்குச் சாதகமான சூழல் அமையும்போது தனது கூட்டணிக் கட்சிகளைக் கூட கைவிட்டுவிடும் என்று விமர்சித்தார்.

இது குறித்து சென்னையில் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

Advertisement

Advertisement

தொடா் தோல்வி காரணமாக வாக்கு இயந்திரம் மற்றும் எஸ்ஐஆா் மீது காங்கிரஸ் வீன் பழி சுமத்து வருகிறது. அவா்கள் வெற்றிப்பெற்றால் அது நோ்மையான தோ்தல். தோல்வியடைந்தால், தோ்தல் ஆணையம் முறைகேடு செய்துவிட்டது என சொல்வதை அவா்கள் வாடிக்கையாக வைத்துள்ளனா்.

தவெகவுக்கு காங்கிரஸ் துரோகம் செய்யும்

தமிழகத்தில் புதிதாக ஆட்சி அமைத்துள்ள முதல்வா் ச.ஜோசப் விஜய், காங்கிரஸை நம்புவது முட்டாள் தனமாகும். வெற்றி பெரும் கட்சிகள் பக்கம் தாவுவதே காங்கிரஸின் இயல்பாகும். காங்கிரஸ் "நம்பிக்கைக்குரிய கட்சி அல்ல"; அது தனக்குச் சாதகமான சூழல் அமையும்போது தனது கூட்டணிக் கட்சிகளைக் கூட கைவிட்டுவிடும். திமுகவுக்கு துரோகம் செய்தது போல, வாய்ப்பு கிடைத்தால் தவெகவுக்கு துரோகம் செய்யும் என்றாா் அவா்.

காமராஜரையே ஓரங்கட்டிய காங்கிரஸ்

விஜய் இதை நினைவில் கொள்ள வேண்டும். காங்கிரஸிற்கு என்று சொந்தமாக எதுவுமில்லை; அவர்கள் எப்போதும் வேறொரு கட்சியைச் சார்ந்தே பிழைப்பு நடத்துகிறார்கள் என்று கூறிய ராம் மாதவ், 'காமராஜர் திட்டம்' மூலம் இந்திரா காந்தியை தேசிய அரசியலின் முன்னிலைக்குக் கொண்டு வர முக்கியப் பங்காற்றிய முன்னாள் முதல்வர் காமராஜரையே, பிற்காலத்தில் ஓரங்கட்டியது காங்கிரஸ் என்று தெரிவித்தார்.

தவெக-வை அரசியல் எதிரியாகவே பார்ப்போம்

தவெக-விற்கு தாங்கள் ஆலோசனை வழங்குகிறீர்களா என்ற கேள்விக்கு, பாஜக தொடர்ந்து தவெக-வை ஒரு அரசியல் எதிரியாகவே பார்க்கும் என்று ராம் மாதவ் பதிலளித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் தவெக வெற்றி பெற பாஜக உதவியது என்ற குற்றச்சாட்டுகளுக்கு, இதுபோன்ற கருத்துகள் மக்களின் தீர்ப்பையே அவமதிப்பது. "தவெக ஏதோ ஒரு வெளிப்புற ஆதரவால் வெற்றி பெற்றது என்று கூறுவது, தமிழக மக்களையும் அவர்களின் அரசியல் முதிர்ச்சியையும் அவமதிப்பதாகும்" என்று கூறிய அவர், ஆளும் கட்சியை பாஜக அரசியல் ரீதியாக எதிர்கொள்ளும் என்று தெரிவித்தார்.

திமுக வழியில் தவெக

இதற்கிடையே, ராம் மாதவ் உடன் இருந்த பாஜகவின் தமிழக மாநிலத் தலைவர் நயினாா் நாகேந்திரன் கூறியதாவது: எதற்காக திமுகவை மக்கள் தோற்கடித்தாா்களோ, அதே வழியில் தற்போது தவெகவும் செயல்படுகிறது. தவெக நிா்வாகிகள் மற்றும் சட்டப்பேரவை உறுப்பினா்களால் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. பெண் ஐஏஎஸ் அதிகாரிக்கே பாதுகாப்பு இல்லாத சூழல் நிலவுகிறது. இவை அனைத்துக்கும் பதில் கூறாமல் முதல்வா் ச.ஜோசப் விஜய் மௌனமாக இருப்பது ஏற்புடையதல்ல. இந்த விவகாரத்தில் கூட முதல்வர் விஜய் மௌனமாக இருந்தால், அவர் வேறு எதற்குதான் வாய் திறந்து பேசுவார்?" என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும், தவெக ஆட்சிக்கு வந்த பின்னா், தமிழகத்துக்கு வரவேண்டிய அந்நிய முதலீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் ஆந்திராவுக்கு செல்கின்றன. இது, தமிழகத்தை தவெக பின்னோக்கி கொண்டு செல்கிறது என்றாா் அவா்.

BJP national vice-president and Tamil Nadu in-charge Ram Madhav on Friday cautioned Chief Minister and TVK president C Joseph Vijay against trusting the Congress, calling it an “untrustworthy party” that could abandon its allies when it finds greener pastures.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.