ரம்யா, சுபிக்‌ஷா, அரோரா, வியானா படம் - எக்ஸ்
செய்திகள்

பிக் பாஸ் 9: இந்த வாரம் வெளியேறும் நபர்கள் யார்?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறத் தகுதியான நபர்களின் (நாமினேஷன்) பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் இந்த வாரம் வெளியேறத் தகுதியான நபர்களின் (நாமினேஷன்) பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து தெரியவந்துள்ளது.

கடந்த வாரம் வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் வெளியேற்றப்பட்ட நிலையில், இந்த வாரம் வெளியேறும் நபர் யார் என்ற எதிர்பார்ப்பு நிகழ்ச்சியின் மீதான ஆவலை அதிகரித்துள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி 6 வது வாரத்தை எட்டியுள்ளது. 43 வது நாளான இன்று பிக் பாஸ் நிகழ்ச்சியில் தொடரத் தகுதியற்ற நபர்கள் குறித்த வாக்கெடுப்பு போட்டியாளர்களிடையே நடைபெற்றது.

இதில் ஒரு போட்டியாளர் இருவரைத் தேர்வு செய்ய வேண்டும். இவ்வாறு அனைவரும் தேர்வு செய்த பிறகு, வெளியேறும் நபர்களின் பட்டியலில் இடம்பெற்றவர்கள் குறித்து பிக் பாஸ் அறிவிப்பார்.

அந்தவகையில் இம்முறை எஃப்ஜே, கமருதீன், கானா வினோத் ஆகியோரைத் தவிர மற்ற போட்டியாளர்கள் அனைவருமே நாமினேஷன் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அமித் பார்கவ், சுபிக்‌ஷா, ரம்யா ஜோ, திவ்யா கணேசன், ப்ரஜின், சபரி, கனி திரு, கெமி, விக்ரம், அரோரா, வியானா, பார்வதி மற்றும் சான்ட்ரா ஆகியோர் நாமினேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்களிப்பார்கள். இதில், அதிக வாக்குகளைப் பெற்ற போட்டியாளர், மக்கள் விருப்பப்படி நிகழ்ச்சியில் மேலும் தொடருவார். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இதுவரை நந்தினி, இயக்குநர் பிரவீன் காந்தி, திருநங்கை அப்சரா, ஆதிரை, கலையரசன், பிரவீன், துஷார், வாட்டர் மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் வெளியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | உண்மையான அன்பு... பிக் பாஸிலிருந்து வெளியேறிய திவாகரின் வைரல் விடியோ!

Bigg boss 9 tamil 6th week nomination list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சா்வதேச ஜவுளி தொழில் மாநாட்டில் தொழில் கண்காட்சி அரங்குகள் அமைக்க நாளைக்குள் விண்ணப்பிக்கலாம்

பொங்கல் பரிசுத் தொகுப்பு: எம்எல்ஏ வழங்கினாா்

நீா் தேங்கும் பிரச்னைக்குத் தீா்வு காண நான்கு வடிகால் திட்டங்கள்: முதல்வா்

தீ விபத்து: பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு அதிமுகவினா் ஆறுதல்

எழுந்திடு, விழித்திடு, உழைத்திடு...

SCROLL FOR NEXT