முகப்பு
செய்திகள்

துல்கர் சல்மானின் ஐயம் கேம் முதல் பார்வை போஸ்டர்!

நடிகர் துல்கர் சல்மானின் ‘ஐயம் கேம்’ படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது...

Updated On : 28 நவம்பர் 2025, 6:36 pm IST
பகிர்:

நடிகர் துல்கர் சல்மானின் “ஐயம் கேம்” திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டர் வெளியாகியுள்ளது.

“ஆர்.டி.எக்ஸ்.” திரைப்படத்தின் இயக்குநர் நஹால் ஹிதாயத் இயக்கத்தில் நடிகர் துல்கர் சல்மான் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படம் “ஐயம் கேம்”.

இந்தப் படத்தில், நடிகர்கள் கதிர், ஆண்டனி வர்கீஸ், இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், அன்பு, அறிவு சகோதரர்கள் சண்டைப் பயிற்சியாளர்களாக இப்படத்தில் இணைந்துள்ளனர்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ‘ஐயம் கேம்’ திரைப்படத்தின் முதல் பார்வை போஸ்டரை படக்குழுவினர் இன்று (நவ. 28) வெளியிட்டுள்ளனர்.

இத்துடன், இந்தப் புதிய திரைப்படம் நடிகர் துல்கர் சல்மானின் ‘வே ஃபாரர்’ நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க: தனுஷ் - 55 தயாரிப்பிலிருந்து விலகிய பிரபல நிறுவனம்?

summary

The first look poster of actor Dulquer Salmaan's film "Im Game" has been released.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.