முகப்பு
செய்திகள்

மிகப்பெரிய சாதனையைச் செய்ய காத்திருக்கும் ஜன நாயகன்!

ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா வணிகம் குறித்து...

Updated On : 30 நவம்பர் 2025, 12:46 pm IST
நடிகர் விஜய்
பகிர்:

நடிகர் விஜய்யின் ஜன நாயகன் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது.

நடிகர் விஜய் நடித்த ஜன நாயகன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவின் கோலாலம்பூரிலுள்ள புக்கிட் ஜலீல் மைதானத்தில் டிச. 27 ஆம் தேதி நடைபெறும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த இசை வெளியீட்டு விழா மைதானத்தில் தமிழகம், மலேசியா, சிங்கப்பூர் பகுதிகளிலிருந்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான ரசிகர்கள் கலந்துகொள்ளலாம் என்றும் அதற்கான பிரம்மாண்ட ஏற்பாடுகளைத் தயாரிப்பு மேற்கொண்டு வருவதாகவும் கூறப்படுகிறது.

Advertisement

Advertisement

இந்த இசை வெளியீட்டு நிகழ்வில் நடிகர் விஜய்யின் 35 ஹிட் பாடல்களுக்கான இசை நிகழ்ச்சியும் நடைபெறுகிறதாம். இதற்கான டிக்கெட் விலை இந்திய மதிப்பில் ரூ. 2200-லிருந்து ரூ. 6200 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புக்கிட் ஜலீல் மைதானம்

இதனால், இசை வெளியீட்டு விழா மூலமாகவே கேவிஎன் தயாரிப்பு நிறுவனம் ரூ. 25 கோடி வரை வசூலிக்கலாம் எனத் தெரிகிறது. அனைத்து டிக்கெட்களும் விற்றுத்தீர்ந்தால் இசை வெளியீட்டு விழாவிலேயே அதிகம் வசூலித்த சாதனை ஜன நாயகனுக்கு அமையும்.

தென்கிழக்கு ஆசியாவின் மிகப்பெரிய மைதானமான புக்கிட் ஜலீலில் 85 ஆயிரம் பேர் வரை கலந்துகொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

summary

jana nayakan movie audio launch function will make huge collections

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments