அபார வரவேற்பு... கூடுதல் திரைகளில் காந்தாரா சாப்டர் - 1!
காந்தாரா - 1க்கு கூடுதல் திரைகள்...
காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்துக்கு தமிழகத்தில் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்த திரைப்படமான காந்தாரா சாப்டர் - 1 அக். 2 ஆம் தேதி இந்தியளவில் பிரம்மாண்டமாக வெளியானது.
காந்தாரா திரைப்படத்தின் முன்கதையாக உருவான இப்படத்திற்கு நல்ல விமர்சனங்களும் வரவேற்பும் கிடைத்திருப்பதால் இதுவரை ரூ. 160 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளது. மேலும், விரைவிலேயே ரூ. 500 கோடியை வசூலிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்த நிலையில், தமிழகத்திலும் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதால் பல திரைகளில் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக திரையிடப்பட்டு வருகின்றன.
இதனால், சென்னை உள்பட பல நகரங்களில் காந்தாரா சாப்டர் - 1 திரைப்படத்திற்குக் கூடுதல் திரைகள் ஒதுக்கப்பட்டுள்ளதால் தமிழகத்திலும் ரூ. 50 கோடி வரை வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: ஓடிடியில் வெளியானது காந்தி கண்ணாடி!
rishab shetty's kantara chapter - 1 movie screens
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.