பிக் பாஸ் போட்டியாளர்கள்  படம் - யூடியூப் / விஜய் டிவி
செய்திகள்

பிக் பாஸ் 9: எல்லோரும் வெளியேற்ற விரும்பிய ஒரு நபர்! யார் தெரியுமா?

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் பலரும் வெளியேற்ற விரும்பிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் சக போட்டியாளர்கள் பலரும் வெளியேற்ற விரும்பிய நபர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

பிக் பாஸ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது. முதல் வாரத்தில் நந்தினி விருப்ப அடிப்படையில் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறினார்.

பின்னர், மக்கள் வாக்குகளின் அடிப்படையில், குறைந்த வாக்குகளைப் பெற்றதாக இயக்குநர் பிரவீன் காந்தி வெளியேற்றப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாவது வாரம் தொடங்கியுள்ளது. இரண்டாவது வாரத்தின் முதல் நாளான இன்று (அக். 13) நாமினேஷன் எனப்படும் உள்ளே இருக்கத் தகுதியற்ற போட்டியாளர்கள் குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் ஒவ்வொரு போட்டியாளரும் இருவரைத் தேர்வு செய்யலாம்.

அந்தவகையில், சுபிக்‌ஷா மற்றும் வியானா ஆகிய இருவரும் வி.ஜே. பார்வதியைத் தேர்வு செய்துள்ளனர். பார்வதி அதிகாரம் செலுத்துவதைப் போன்று உள்ளதால் பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டாம் என நாமினேஷன் செய்துள்ளனர்.

இதனை அடுத்து, விக்கல்ஸ் விக்ரம் மற்றும் வாட்டர்மெலன் ஸ்டார் திவாகர் ஆகியோர் கம்ருதினை தேர்வு செய்தனர். இவ்வாறு நிகழ்ச்சியில் உள்ள 18 போட்டியாளர்களும் இரு போட்டியாளர்களைத் தேர்வு செய்தனர். இதில் அதிகமாகத் தேர்வு செய்யப்பட்ட நபர்களை பிக் பாஸ் அறிவித்தார்.

அந்தவகையில், அதிக போட்டியாளர்களால் தேர்வு செய்யப்பட்டவர்களின் பட்டியலில் வி.ஜே. பார்வதி முதல் இடத்தில் உள்ளார். இவருக்கு அடுத்தபடியாக கம்ருதீனின் பெயரை பிக் பாஸ் குறிப்பிட்டார். இவர்களுக்கு அடுத்தபடியாக அரோரா, எஃப்.ஜே, அப்சரா, ரம்யா, சபரி, கெமி ஆகியோர் நாமிநேஷன் செய்யப்பட்டுள்ளனர்.

இந்தப் பட்டியலில் உள்ளவர்களின் தங்களுக்கு விருப்பமானவர்களுக்கு அல்லது போட்டியில் தொடர வேண்டும் என கருதுபவர்களுக்கு மக்கள் இந்த வாரம் முழுக்க வாக்கு செலுத்துவார்கள். குறைந்த வாக்குகளைப் பெற்ற நபர் அடுத்த வாரம் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுவார்.

இதையும் படிக்க | பிக் பாஸ் ஒரு போதிமரம்: இயக்குநர் பிரவீன் காந்தி கருத்து

Bigg boss tamil 9 2nd week Nomination list

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தீபாவளிக்காக வீட்டை சுத்தம் செய்தபோது கிடைத்த ரூ. 2 லட்சம்! பழைய ரூ. 2,000 தாள்கள்!

தீபாவளியையொட்டி பங்குச் சந்தைகளுக்கு விடுமுறை!

இந்தியா - பாக். உறவை இணைப்போம்: இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் டிரம்ப்!

டெஸ்ட் போட்டிகளில் 3000 ரன்களைக் கடந்த மார்க்ரம்!

கரூர் கூட்ட நெரிசல் பலி!: CBI விசாரணைக்கு உத்தரவு | செய்திகள்: சில வரிகளில் | 13.10.25

SCROLL FOR NEXT