காந்தா டிரைலர் எப்போது?
காந்தா படத்தின் டிரைலர் குறித்து...
துல்கர் சல்மானின் காந்தா பட டிரைலர் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும், நடிகர் துல்கர் சல்மான், வித்தியாசமான வேடங்களில் தொடர்ந்து நடித்து வருவதன் மூலம் ரசிகர்களிடையே தனி கவனம் பெற்றுள்ளார்.
தற்போது, இயக்குநர் செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில், காந்தா படத்தில் துல்கர் நாயகனாக நடித்து முடித்துள்ளார். இது மறைந்த நடிகர் தியாகராஜ பாகவதரின் வாழ்க்கைக் கதையாக உருவாகியுள்ளது.
Advertisement
Advertisement
இப்படத்தின் டீசர் மற்றும் பாடல் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றிருந்தது. தயாரிப்பு நிறுவனமும் காந்தாவை செப். 12 ஆம் தேதி வெளியீடாகத் திரைக்குக் கொண்டுவர திட்டமிட்டிருந்தனர். ஆனால், வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையில், இப்படத்தின் டிரைலர் தயாராகியுள்ளதாகவும் தீபாவளி வெளியீடாக இன்னும் சில நாள்களுக்குள் வெளியிடுவார்கள் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிக்க: அஞ்சான் மறுவெளியீட்டுத் தேதி!
dulquer salmaan's kaantha movie trailer update
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.