செய்திகள்

பிக் பாஸ் அதிரடி முடிவு! துஷார் தலைவர் பதவி பறிப்பு!!

துஷாரின் வீட்டுத் தலைவர் பதவி பறிக்கப்பட்டது தொடர்பாக....

இணையதளச் செய்திப் பிரிவு

பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர் துஷாரின் வீட்டுத் தலைவர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி கடந்த அக். 5 ஆம் தேதி முதல் ஒளிபரப்பாகி வருகிறது. கடந்த சீசனை தொகுத்து வழங்கிய நடிகர் விஜய்சேதுபதியே, இம்முறையும் தொகுத்து வழங்கி வருகிறார்.

பிக் பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி இரண்டாவது வாரத்தை எட்டியுள்ளது. யோகா பயிற்சியாளர் நந்தினி தாமாக முன்வந்தும், முதல் வார எவிக்‌ஷனில் இயக்குநர் பிரவீன் காந்தியும் வீட்டைவிட்டு வெளியேறினர்.

பிக் பாஸ் வீடு இம்முறை சூப்பர் டீலக்ஸ் வீடு, பிக் பாஸ் வீடு என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் வீடு சொகுசு வசதிகளுடனும், பிக் பாஸ் வீடு அடிப்படை வசதிகளுடன் அமைக்கப்பட்டுள்ளது. பிக் பாஸ் வீட்டில் 12 பேரும் பிக் பாஸ் டீலக்ஸ் வீட்டில் 6 பேரும் உள்ளனர்.

இந்த புதிய சீசன் போட்டியாளர்கள், முந்தைய சீசன் போட்டியாளர்களைப் போல இல்லாமல், சுதந்திரமாகவும் விதிமுறைகளைக் கடைப்பிடிக்காமலும் இருந்து வருவதாக ரசிகர்கள் குற்றம் சாட்டி வந்தனர்.

இதனிடையே, துஷார் இந்த வார வீட்டுத் தலைவராக இருந்து வருகிறார். இன்று(அக். 16) வெளியான முன்னோட்ட விடியோவில் துஷாரின் வீட்டுத் தலைவர் பதவி பறிக்கப்படுவதாக பிக் பாஸ் தெரிவித்துள்ளார்.

போட்டியாளர்கள் அனைவரும் அழைத்த பிக் பாஸ், “இந்த பிக் பாஸ் வீடு ஒவ்வொரு விஷயத்துக்கும் பெயர்வாங்கும். இந்த முறை ஒழுக்கம் இல்லாத வீடு என்று பெயர் வாங்கியுள்ளது. தூங்குவது, மைக் மாட்டாமல் இருப்பது என விதிமுறைகளைக் கடைப்பிடிப்பது இல்லை.

வீட்டுத் தலைவரான துஷாரே மைக் மாட்டுவதற்கு மறந்து விடுகிறார். வீட்டுத் தலைவரே இருப்படி இருந்தால், மற்றவர்கள் எப்படி ஒழுங்காக நடந்து கொள்வார்கள். ஒழுக்கம் இல்லாத வீட்டுக்கு வீட்டுத் தலைவரே தேவையில்லை” என்றார்.

துஷாரிடம் இருந்து வீட்டுத் தலைவர் பதவி பறிக்கப்படுவதாகவும் பிக் பாஸ் அறிவித்தார்.

மேலும், இது குறித்த முழுமையான தகவல்கள் இன்று வெளியாகும் எபிசோடில் தெரியவரும்.

Contestant Tushar has been stripped of his position as head of the house on the Bigg Boss show.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சொல்லப் போனால்... கூட்டணியில் வலுப்பெறும் பாரதிய ஜனதா?

ஓலா எலக்ட்ரிக் விற்பனை 31% சரிவு

காரியம் கைகூடும் இவர்களுக்கு: தினப்பலன்கள்!

அந்நியச் செலாவணி கையிருப்பு 70,136 கோடியாக அதிகரிப்பு!

புதிய அரசியல் கட்சி தொடங்குகிறாா் பண்ருட்டி ராமச்சந்திரன்: தோ்தல் ஆணையத்தில் பதிவு

SCROLL FOR NEXT