3 மணி 44 நிமிஷங்களுடன் வெளியாகும் பாகுபலி - தி எபிக்!
பாகுபலி தி எபிக் படத்தின் தணிக்கைச் சான்றிதழ் குறித்து...
பாகுபலி முதல் மற்றும் இரண்டாம் பாகத்தை இணைந்து ஒரே திரைப்படமாக பாகுபலி தி எபிக் என்ற பெயரில் வெளியாக இருக்கிறது.
இந்தப் படத்திற்கு யு/ஏ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. படத்தின் கால அளவு (ரன்னிங் டைம்) 3 மணி நேரம் 44 நிமிஷம் இருக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி இயக்கத்தில் நடிகர்கள் பிரபாஸ், அனுஷ்கா ஷெட்டி, சத்யராஜ் நடிப்பில் பாகுபலி திரைப்படம் உருவானது.
Advertisement
Advertisement
கடந்த 2015 ஆம் ஆண்டு திரைக்கு வந்த இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதுடன் இந்திய சினிமாவின் தரத்தையும் உயர்த்தியது.
கட்டப்பா எதற்காக பாகுபலியைக் கொன்றார்? என்ற பெரும் ஆவலுடன் முடிக்கப்பட்டு பார்வையாளர்களை யோசிக்கச் செய்த ‘பாகுபலி’ முதல் பாகத்தால் இரண்டாம் பாகமும் ரூ. 1,800 கோடி வரை வசூலைக் குவித்து மாபெரும் வணிக வெற்றிப்படமானது.
இந்தப் படம் வருகிற அக். 31 ஆம் தேதி மறுவெளியீடாகிறது.
Baahubali 1 and 2 will be released as a single film titled Baahubali The Epic.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.