தே கால் ஹிம் ஓஜி போஸ்டர். 
செய்திகள்

ஓடிடியில் வெளியான பவன் கல்யாணின் ஓஜி!

பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் பவன் கல்யாணின் ஓஜி திரைப்படம் ஓடிடியில் வெளியானது.

ஆந்திர துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் - இயக்குநர் சுஜித் கூட்டணியில் உருவான ’தே கால் ஹிம் ஓஜி’ திரைப்படம் அண்மையில் பிரம்மாண்டமாக வெளியானது.

பவன் கல்யாணுடன் பிரியங்கா மோகன் மற்றும் எம்ரான் ஹம்ஷி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இப்படத்தை சாகோ மற்றும் ரன் ராஜா ரன் ஆகியப் படங்களை இயக்கிய சுஜித் இயக்கியுள்ளார்.

அதிரடி ஆக்சன் காட்சிகள், காட்சிகளை உருவாக்கிய விதம் என சில விஷயங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்ததால், இப்படம் உலகளவில் ரூ. 350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த நிலையில், இப்படம் இன்று(அக். 23) நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி் தளத்தில் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

பவன் கல்யாண் நடித்த திரைப்படங்களிலேயே அதிகம் வசூலித்த திரைப்படம் ஓஜிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இண்டிகோ விமான சேவையை 5% குறைத்த மத்திய அரசு! தினமும் 115 விமானங்கள் குறைப்பு!

புதுவையைப் பார்த்தும் தமிழக அரசு கற்றுக்கொள்ளாது! TVK தலைவர் விஜய் 2 FULL SPEECH

திருமண பந்தத்தில் இணைந்த பிக் பாஸ் பிரபலம்!

அன்புமணிக்கு எந்த உரிமையும் இல்லை; வேண்டுமெனில் அவர் தனிக்கட்சி தொடங்கட்டும்: ராமதாஸ்

நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் பதவிநீக்க தீர்மானம்: இந்தியா கூட்டணி சமர்ப்பிப்பு!

SCROLL FOR NEXT