கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ... படங்கள்: விஷ்ணு விஷால்.
செய்திகள்

கட்டா குஸ்தி 2 அறிவிப்பு விடியோ!

நடிகர் விஷ்ணு விஷால் அறிவித்த புதிய படம் குறித்து...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஷ்ணு விஷால் கட்டா குஸ்தி 2 படத்தின் அறிவிப்பு விடியோவை வெளியிட்டுள்ளார்.

முதல் பாகத்தை இயக்கிய செல்லா அய்யாவு இந்தப் படத்தை இயக்குகிறார்.

நடிகர் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பில் கடந்த 2022-இல் வெளியான கட்டா குஸ்தி திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்றது.

நடிகர் விஷ்ணு விஷாலே தயாரித்த இந்தப் படத்தை சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் படத்தை இயக்கிய செல்லா அய்யாவு இயக்கியிருந்தார்.

இந்நிலையில், இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான அறிவிப்பு விடியோவை விஷ்ணு விஷால் வெளியிட்டுள்ளார்.

இந்தப் படத்தை வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிக்க, செல்ல அய்யாவு இயக்க, நாயகியாக ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

இந்தப் படத்துக்கு ஷான் ரோல்டன் இசையமைப்பாளர் என்றும் படக்குழு அறிவித்துள்ளது.

Actor Vishnu Vishal has released the announcement video of the film Khatta Kusthi 2.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உத்ராடம்... ரஜிஷா விஜயன்!

அயர்லாந்துக்கு எதிரான டி20 தொடருக்கான இங்கிலாந்து அணியில் மாற்றம்!

மேற்கு வங்க பேரவையில் அமளி: 5 பாஜக எம்எல்ஏ-க்கள் இடைநீக்கம்!

ஓணம் கொண்டாட்டம்... அனந்திகா சனில்குமார்!

டிவிஎஸ் என்டார்க் 150 ஸ்கூட்டர் அறிமுகம்!

SCROLL FOR NEXT