விஜய், ஓவியா 
செய்திகள்

விஜய்யைக் கைது செய்ய வேண்டும்: ஓவியா

ஓவியாவின் பதிவு வைரலாகி வருகிறது...

இணையதளச் செய்திப் பிரிவு

நடிகர் விஜய்யைக் கைது செய்ய வேண்டும் என நடிகை ஓவியா தெரிவித்துள்ளார்.

நடிகரும் த.வெ.க. தலைவருமான விஜய் நேற்று (செப். 27) இரவு கரூரில் பரப்புரையில் ஈடுபட்டபோது ஏற்பட்ட மிக மோசமான நெரிசலில் 40 பேர் பலியானது மாநிலத்தையே உலுக்கியுள்ளது.

பலியானவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ. 10 லட்சமும் த.வெ.க. சார்பில் விஜய் ரூ. 20 லட்சமும் இழப்பீடு வழங்குவதாக அறிவித்துள்ளனர்.

இந்த நிலையில், நடிகை ஓவியா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ‘விஜய்யைக் கைது செய்யவும் (Arrest vijay)’ எனக் கூறியிருந்தார். இதனைக் கண்ட த.வெ.க. தொண்டர்கள் ஓவியாவைக் கடுமையான வார்த்தைகளால் தாக்க, சில நிமிடங்களிலேயே அப்பதிவை நீக்கிவிட்டார்.

ஓவியா பதிவிட்டு நீக்கியது...

ஆனால், ஓவியாவின் பழைய பதிவுகளுக்குச் சென்ற விஜய் ரசிகர்கள் அவரை ஆபாசமாகத் திட்டி வருகின்றனர். இவற்றை ஸ்க்ரீன் ஷாட் (screen shot) எடுத்த ஓவியா ஒவ்வொன்றையும் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்து வருகிறார்.

actor oviya posted about tvk leader vijay arrest

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அழகும் ஐஸ்வர்யமும்... ஆஷிகா!

கரூர் பலி: எங்கள் முதல் குற்றச்சாட்டு மாநில அரசு மீதுதான் - அண்ணாமலை

கரூர் பலி: ஒரு நபர் ஆணையத்தில் நம்பிக்கையில்லை - அண்ணாமலை

லடாக்கின் குரலை ஒடுக்க இளைஞர்களைக் கொன்று பாஜக பதிலடி கொடுத்துள்ளது! -ராகுல் காந்தி

மாலை மயங்குகிறது... பிரனிதா சுபாஷ்!

SCROLL FOR NEXT