உமாபதி ராமையா இயக்கத்தில் டிஎன் 2026! டீசர் அறிவிப்பு!
டிஎன் 2026 படத்தின் டீசர் அறிவிப்பு தொடர்பாக...
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா இயக்கும் டிஎன் 2026 படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
‘ராஜா கிளி’ திரைப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர், உமாபதி ராமையா. நடிகர் தம்பி ராமையா கதை மற்றும் வசனம் எழுதி, அரசியல் கலந்த நகைச்சுவை பாணியில் எடுக்கப்பட்டுள்ள புதிய படத்தை உமாபதி ராமையா இயக்குகிறார்.
இந்தப் படத்தில், நடிகர்கள் நட்டி, எம்.எஸ். பாஸ்கர், இளவரசு ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
Advertisement
Advertisement
மேலும், சாந்தினி தமிழரசன், யாஷிகா ஆனந்த், ஸ்ரீத்தா ராவ், விஜி சந்திரசேகர், கிங்காங், தேவி மகேஷ், ஜான் விஜய், ஆடுகளம் நரேன், கிங்ஸ்லி உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
கண்ணன் ரவி குழு மற்றும் கந்தரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு, தர்புகா சிவா இசையமைத்துள்ளார்.
சிறப்புத் தோற்றத்தில் சாண்டி நடித்துள்ளார். இப்படத்தின் வெளியீட்டுப் பணிகள் முழுமையாக நிறைவடைந்துள்ள நிலையில், வரும் ஏப். 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்த நிலையில், டிஎன் 2026 திரைப்படத்தின் டீசர் நாளை வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.
தமிழக அரசியலை மையமாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
An announcement has been released regarding the teaser for the film *TN 2026*, directed by Umapathy Ramaiah, the son of actor Thambi Ramaiah.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.