முகப்பு
செய்திகள்

தமிழ்நாட்டில் சினிமாக்காரன் வாழலாம், ஆளலாமா? டிஎன் 2026 டீசர்!

டிஎன் 2026 தங்க நட்சத்திரம் திரைப்படத்தின் டீசர்...

Updated On : 2 ஏப்ரல் 2026, 6:03 pm IST
நட்டி நட்ராஜ் - tn 2026
பகிர்:

நடிகர் நட்டி நட்ராஜ் நடித்த அரசியல் திரைப்படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.

இயக்குநர் உமாபதி எஸ் ராமைய்யா இயக்கத்தில் நடிகர்கள் நட்டி நட்ராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க நடிகர்கள் எம். எஸ். பாஸ்கர், தம்பி ராமைய்யா உள்ளிட்டோர் நடித்த அரசியல் திரைப்படம் டிஎன் 2026 தங்க நட்சத்திரம்.

இப்படம் முழுநீள அரசியல் நகைச்சுவைத் திரைப்படமாக உருவான இது, ஏப். 10 ஆம் தேதி திரைக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

Advertisement

இந்த நிலையில், இப்படத்தின் டீசரை இன்று வெளியிட்டுள்ளனர். இதில், ”சினிமாகார பயல்கள் தமிழ்நாட்டில் வாழலாம், ஆளலாமா?, நடிகர்களுக்கு அரசியல் தெரியாதா?, எம்ஜிஆர் எல்லாம் எப்படி முதல்வர் ஆனார்? எங்கள் தலைவருக்கும் அதே மாஸ் இருக்கிறது!” போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

மறைமுகமாக நடிகர் விஜய்யின் அரசியல் வருகையைக் கேள்வி கேட்கும் படமாகவே இது உருவாகியிருப்பதாகத் தெரிகிறது. நட்டியின் தோற்றம் விஜய் போன்றும், தம்பி ராமைய்யாவின் தோற்றம் தவெக பொதுச்செயலர் என். ஆனந்த் போன்றும் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

summary

tn 2026 movie teaser out now starring by natty natraj and thambi ramaiah

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.