குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடிகை ஸ்ரேயா - சித்து!
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கணவருடன் நடிகை ஸ்ரேயா பங்கேற்றுள்ளது குறித்து...
குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியில் சின்ன திரை நடிகை ஸ்ரேயா தனது கணவர் சித்துவுடன் பங்கேற்றுள்ளார்.
சின்ன திரையில் பிரபல ஜோடியாக வலம்வரும் இவர்கள், குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் தனது சமையல் திறனையும், நகைச்சுவை திறனையும் வெளிப்படுத்தவுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியின் மக்களால் விரும்பி பார்க்கப்படும் நிகழ்ச்சியாக குக் வித் கோமாளி உள்ளது. இந்த நிகழ்ச்சி தற்போது 7வது சீசனை எட்டியுள்ளது. இதற்கு முந்தைய சீசன்களில் இருந்து வேறுபட்டு இருக்கும் வகையில், போட்டியாளர்கள் அனைவரும் கணவன் - மனைவி என ஜோடியாக உள்ளனர்.
Advertisement
Advertisement
பாடகர் மனோ - ஜமீலா, நடிகர் அரவிந்த் சேஜு - நடிகை சங்கீதா, கானா வினோத் - பாக்கியா, ரியாஸ் - நிஷா, நடிகை சம்யுக்தா - அனிருத்தா ஸ்ரீகாந்த் உள்ளிட்ட ஜோடிகள் பங்கேற்றுள்ளனர். இவர்களுடன் தற்போது நடிகை ஸ்ரேயா - சித்து தம்பதி இணைந்துள்ளனர்.
கடந்த முறை பங்கேற்ற கோமாளிகள் இம்முறையும் இடம்பெற்றுள்ளனர். நடுவர்களாக சமையல் கலைஞர்கள் தாமு, மாதம்பட்டி ரங்கராஜன், கௌசிக் சங்கர் ஆகியோருன் புதிதான நடிகை ரோஜா இணைந்துள்ளார்.
கன்னட திரைப்படங்களில் நாயகியாக நடித்துவந்த நடிகை ஸ்ரேயா, 2019 ஆம் ஆண்டு கன்னட தொடரில் நடித்ததன் மூலம் சின்ன திரைக்கு அறிமுகமானார். நந்தினி, திருமணம் ஆகிய இரு தொடர்களில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நன்கு அறியப்பட்டவரானார்.
திருமணம் தொடரில் நடிக்கும்போது உடன் நாயகனாக நடித்த நடிகர் சித்துவை காதலித்து திருமணம் செய்துகொண்டார் ஸ்ரேயா. இதனைத் தொடர்ந்து வள்ளியின் வேலன் தொடரில் இருவரும் இணைந்து நடித்தனர். இத்தொடரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது.
சின்ன திரையில் பலரைக் கவர்ந்த தம்பதியாக இருக்கும் ஸ்ரேயா - சித்து, குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளனர். இது தொடர்பான முன்னோட்ட விடியோவும் வெளியாகி மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது.
Serial actress Shreya Sidhu Sid in vijay tvs Cooku With Comali
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.