வெற்றிப் பாதைக்குத் திரும்புவாரா ஷேன் நிகம்?
மலையாள நடிகர் ஷேன் நிகமின் புதிய திரைப்படம் குறித்து...
பிரபல மலையாள நடிகர் ஷேன் நிகம் நாயகனாக நடித்துள்ள புதிய படத்தின் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றுள்ளது. சமீபத்தில் வெற்றியைப் பெறாமல் இவருக்கு இந்தப் படம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
பறவ, கும்பளாங்கி நைட்ஸ், இஷ்க் ஆகிய மலையாள திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் ஷேன் நிகம். தமிழில் மெட்ராஸ்காரன் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமாகியிருந்தார்.
ஜீத்து ஜோசப்பின் உதவி இயக்குநர் மார்டின் ஜோசப் இயக்கியுள்ள ட்ரைடம் படத்தில் காவலதிகாரியாக ஷேன் நிகம் நடித்துள்ளார். இந்தப் படம் வரும் மே.8ஆம் தேதி வெளியாகிறது.
Advertisement
Advertisement
இ4 என்டர்டெயின்மென்ட் தயாரிக்க, ஜீத்து ஜோசப் இந்தப் படத்தை வழங்குகிறார். இந்தப் படத்தில் சானியா ஃபாதிமா, சோபி திலகன், கிருஷ்ண பிரபா, கோட்டையம் ரமேஷ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
ஷேன் நிகம் நடிப்பில் கடைசியாக வெளியான பல்டி, ஹால் ஆகிய திரைப்படங்கள் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெறவில்லை. அதனால், இந்தப் படத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பில் இருக்கிறார்கள்.
Will Shane Nigam return to the path of success?
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.