எதிர்நீச்சல் ஆதி குணசேகரனுக்குப் பிறகு... அழகே அழகு வில்லனுக்கு குவியும் பாராட்டுகள்!
அழகே அழகு தொடரில் தங்கராஜ் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துவரும் நடிகர் குறிஞ்சி நாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
அழகே அழகு தொடரில் தங்கராஜ் என்ற பாத்திரத்தில் வில்லனாக நடித்துவரும் நடிகர் குறிஞ்சி நாதனுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
வீட்டின் மூத்த மருமகனாக உள்ள தங்கராஜ், முழுமையாக நல்லவனாகவும் இல்லாமல், முழுமையாக வில்லனாகவும் இல்லாமல் அவரை வெற்றுக்க முடியாத அளவுக்கு அவரின் பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
இதனால், எதிர்நீச்சல் ஆதி குணசேகரன் பாத்திரத்தில் நடித்த மாரிமுத்துவுக்குப் பிறகு அழகே அழகு தொடரின் தங்கராஜ் பாத்திரத்திற்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
Advertisement
Advertisement
தங்கராஜ் பாத்திரத்தின் மனநிலைக்கு ஏற்ப நடிகர் குறிஞ்சி நாதனும் மிகவும் பொருத்தமாக நடிப்பதால், பலதரப்பட்ட ரசிகர்கள் அவருக்கு உருவாகியுள்ளனர்.
விஜய் தொலைக்காட்சியில் திங்கள் - வெள்ளி இரவு 7:30 மணிக்கு அழகே அழகு தொடர் ஒளிபரப்பாகி வருகிறது.
செல்லம்மா தொடரில் நடித்த அன்ஷிதா, தமிழும் சரஸ்வதியும் தொடரில் நடித்த நக்ஷத்ரா ஆகியோர் நாயகிகளாக நடிக்கின்றனர். அன்ஷிதாவுக்கு ஜோடியாக குணா குமரன், நக்ஷத்திராவுக்கு ஜோடியாக பிரேம் ஜேக்கப் நடிக்கின்றனர். இவர் நீ நான் காதல் தொடரில் நாயகனாக நடித்திருந்தார்.
இவர்கள் மட்டுமின்றி குறிஞ்சி நாதன், சுனிதா, மதன் குமார் உள்ளிட்ட துணை கதாபாத்திரங்களின் நடிப்பும் இத்தொடருக்கு வலு சேர்த்துள்ளது.
பொதுவாக அனைத்து குடும்பங்களிலும், உறவுகளிலும் இருக்கும் பாத்திரங்களை முதன்மையாக வைத்து இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது. இதனால் பலராலும் தொடர்புபடுத்திக்கொள்ளும் வகையில் அழகே அழகு தொடர் உள்ளது.
வெறும் நடிகர்களுக்காக தொடரை எடுக்காமல், நடிகர்களை பாத்திரத்தில் ஒன்றவைத்து இத்தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
பழமைவாதம் நிறைந்த வீட்டில் அனைத்தையும் சகித்துக்கொண்டு வீட்டு வேலைகளைச் செய்யும் மூத்த மருமகள், அதே வீட்டில் சுயமரியாதையுடன் இருக்க வேண்டும் என நினைக்கும் இளைய மருமகள் என இருவரை மையப்படுத்தி இந்தத் தொடர் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்த வீட்டின் மூத்த மகளை திருமணம் செய்துகொண்ட தங்கராஜ் என்ற மாப்பிள்ளை பாத்திரத்தில் குறிஞ்சிநாதன் நடிக்கிறார்.
பழமைவாதம் நிறைந்த கம்பீரமான ஆணாக இவரின் பாத்திரம் அமைக்கப்பட்டிருந்தாலும், இளைய மருமகளை கட்டுக்குள் வைக்க முடியாமல் அல்லல்படுகிறார். இது பார்வையாளர்களுக்கு ஒருவித ஆனந்தத்தை அளிக்கிறது. முழுமையாக வெறுக்கவும் முடியாதபடிக்கு குறிஞ்சிநாதனின் நடிப்பு சிறப்பாக அமைந்துள்ளதால், பலரும் விரும்பும் வகையில் தங்கராஜ் பாத்திரம் அமைந்துள்ளது.
எதிர்நீச்சல் ஆதி குணசேகரனுக்கு பிறகு தங்கராஜ் பாத்திரம் மிகவும் பிடித்திருப்பதாக ரசிகர்கள் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
After Ethirneechal Aadhi gunasekaran Azhagae azhagu serial villian actor Kurunji nathan got applause
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.