எங்கு சென்றாலும் தொடர்கிறது... நடிகை த்ரிஷா பதிவால் ரசிகர்கள் சோகம்!
நடிகை த்ரிஷா பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்பது பற்றி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு பற்றி..
நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கும் ஒரு கருத்து இன்று வைரலாகி வருகிறது.
வீடு, வேலை, பள்ளி, அலுவலகம் என வாரம் முழுக்க ஓடிக் கொண்டிருக்கிறோம், என்றாவது நண்பர்களை உறவுகளை சந்திக்கும் நிகழ்ச்சி என்றால் குதூகலத்துடன் கிளம்பிவிடுவோம். ஆனால், சிறிது நேரத்திலேயே பறவை போல கூடு திரும்பும் எண்ணம் வந்துவிடுகிறது. இது பலருக்கும் ஏற்பட்டிருக்கலாம்.
ஆனால், திடீரென நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாகிராமில், "இப்போதெல்லாம் எந்தவொரு சமூகக் கூட்டத்திலும் நான் இப்படித்தான்"
Advertisement
Advertisement
"சுமார் 32 நிமிடங்களுக்கு நான் கலகலப்பாக இருப்பேன், அதன் பிறகு வீட்டுக்குச் செல்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்கிவிடுவேன்" என்று பதிவிட்டுள்ளார்.
பொதுவாக அவர் பதிவிட்டிருப்பதைப் பார்க்கும்போது நம்மைப்போலவே நினைக்கிறாரோ என்று பலரும் நினைத்திருக்கலாம்.
ஆனால், எங்குச் சென்றாலும் அவருக்கு ஏதோ மன நெருக்கடி கொடுக்கும் கேள்விகள் எழலாம், யாராவது கருத்துகளைக் கூறலாம், அதனால் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது கசப்பான அனுபவமாக மாறியிருக்கலாமோ என்றெல்லாம் அவரது ரசிகர்களுக்கு சந்தேகம் எழுந்திருக்கிறது.
இப்போதெல்லாம் வெளியே சென்று அதிக நேரம் பலராலும் நட்புகளுடன் பேசி கலகலப்பாக இருக்க முடியாமல் போய்விடுகிறது.
இது ஏதோ ஒரு நோய் என்று சிலர் நினைத்துக் கொண்டிருக்கலாம். இப்போது நடிகை த்ரிஷா தன்னுடைய இன்ஸ்டாவில் பதிவிட்டிருப்பதை பார்க்கும்போது ஒத்த வயதுடைய பலருக்கும் அடடா, நம்மைப் போன்றே நடிகை த்ரிஷாவும் இருக்கிறாரே என ஆச்சரியம் மேலோங்கியும் இருக்கலாம்.
பொதுவாகவே மக்கள் கொண்டாட்டத்தையும், கூடி வாழ்வதையுமே அதிகம் விரும்புவார்கள். ஆனால், இப்போதிருக்கும் அவசர உலகத்தில் ஏதோ தங்களது வீடே ஒரு உலகம் போல மாறி, அதற்குள்ளேயே சிறைபட்டுக் கிடக்கவே பலரும் விரும்புகிறார்கள்.
அது போலவே நடிகை த்ரிஷாவும் உணர்வதாக பதிவிட்டிருப்பது ஒரு பக்கம் நகைச்சுவையாக இருந்தாலும் மறுபக்கம் இந்த சமூகம் அப்படிப்பட்ட நிலைக்குத் தள்ளியிருக்கிறதா? இல்லை வேறு ஏதேனும் காரணங்களால் அவர் அப்படி பதிவிட்டாரா? என சமூக வலைத்தளமே அலசி ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
Wherever goes... Actress Trisha shares a sad moment! Post goes viral.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.