ஜிடிஎன் படத்தில் ரங்கநாயகி கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன்!
மாதவனின் ஜிடிஎன் திரைப்படத்தில் நாயகியாக இருக்கும் துஷாரா விஜயன் குறித்து...
மாதவனின் ஜிடிஎன் திரைப்படத்தில் நாயகியாக நடித்திருக்கும் துஷாரா விஜயன் கதாபாத்திர போஸ்டர் வெளியாகியுள்ளது.
ஜிடிஎன் திரைப்படத்தில் மாதவனின் மனைவியாக ரங்கநாயகி என்ற கதாபாத்திரத்தில் துஷாரா விஜயன் நடித்திருக்கிறார் என போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குநர் பா. இரஞ்சித் இயக்கத்தில் சார்பட்டா பரம்பரை படத்தில் மாரியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்து தமிழக ரசிகர்களிடையே மிகப்பெரிய புகழினைப் பெற்றார்.
Advertisement
Advertisement
இந்தப் படத்துக்குப் பிறகு தனுஷுடன் ராயன், ரஜினியுடன் வேட்டையன் படங்களில் நடித்திருந்தார். சமீபத்தில் விக்ரமுடன் வீர தீர சூரன் படத்திலும் சிறப்பாக நடித்திருந்தார்.
குறிப்பாக ராயன் படத்தில் துஷாரா விஜயனின் ஆக்ஷன் காட்சிகளுக்கு பாராட்டும் கிடைத்தது. அந்தப் படம் தேசிய விருது பெற்றதும் குறிப்பிடத்தக்கது.
புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் ஜி.டி. நாயுடுவின் வாழ்க்கைக் கதையில் நடிகர் மாதவன் நடித்துள்ளார். ஜி.டி. நாயுடுவாக மாதவன் நடிக்க இப்படத்தை இயக்குநர் கிருஷ்ணகுமார் ராமகுமார் இயக்கியுள்ளார்.
இந்தப் படத்தின் டீசர், டிரைலர் வெளியாகி கவனம் பெற்றது. வருகிற ஆக. 7 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
Dushara Vijayan in the role of Ranganayaki in the movie GDN
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.