FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு

அஞ்சலி பாட்டீலின் செல்வி..! பூசன் திரைப்பட விழாவில் தேர்வான தமிழ்ப் படம்!

தமிழ்நாட்டைச் சேர்ந்த சைலேஷ் ரத்னகுமார் இயக்கிய செல்வி திரைப்படம் குறித்து...

செல்வி படத்தில் அஞ்சலி பாட்டீல். - படம்: இன்ஸ்டா / அஞ்சலி பாட்டீல்.
பகிர்:

தமிழ்நாட்டைச் சேர்ந்த சைலேஷ் ரத்னகுமார் இயக்கிய செல்வி திரைப்படம் பூசன் திரைப்பட விழாவில் திரையிட தேர்வாகியுள்ளது.

இந்தப் படத்தில் நாயகியாக அஞ்சலி பாட்டீல் நடித்துள்ளார். மேலும் இவரே இந்தப் படத்தினை தயாரித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் ரஜினியின் காலா படத்தில் நடித்து கவனம் பெற்றவர் நடிகை அஞ்சலி பாட்டீல். ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். தேசிய விருது வென்ற இவர் பல வித்தியாசமான படங்களில் நடித்து வருகிறார்.

Advertisement

Advertisement

தென் கொரியாவில் நடக்கும் பூசன் திரைப்பட விழாவில் வரும் அக்.6ஆம் தேதி இந்தப் படம் ஆசிய பிரிவில் திரையிடப்பட விருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் புலம்பெயர்ந்த செவிலியர்கள் படும் கஷ்டத்தை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. ஒளிப்பதிவாளர் பார்கவ் ஸ்ரீதர் உடன் இணைந்து இந்தப் படத்தின் கதையை உருவாக்கியுள்ளார் இயக்குநர் சைலேஷ் ரத்னகுமார்.

சைலேஷ் ரத்னகுமார் கோயம்புத்தூரில் இருந்து சென்னைக்கு புலம்பெயர்ந்துள்ளார். செல்வி என்ற செவிலியரின் வாழ்க்கையை படமாக எடுத்துள்ளார். இதில் நாயகியாக அஞ்சலி பாட்டீல் அசத்தியுள்ளார்.

summary

Sailesh Rathnakumar's Selvi to be screened at Busan International Film Festival

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments