FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழா..! ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஓமர் அப்துல்லா!

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்து...

Updated On : 18 ஆகஸ்ட் 2026, 7:30 pm IST
ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஜம்மு காஷ்மீர் முதல்வர் ஓமர் அப்துல்லா. - படங்கள்: எக்ஸ் / சிஎம்ஓ ஆஃப் ஜம்மு காஷ்மீர்
பகிர்:

ஜம்மு காஷ்மீரில் நடைபெறும் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழாவுக்கான முன் தயாரிப்புப் பணிகளை முதல்வர் ஓமர் அப்துல்லா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஜம்மு காஷ்மீரில் முதல்முறையாக நடைபெற இருக்கும் திரைப்பட விழாவுக்கு 50 நாடுகளில் இருந்து 1,100 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன. இந்த விழா செப்.7 முதல் 10ஆம் தேதிவரை நடைபெற இருக்கின்றது.

தேசிய திரைப்பட மேம்பாட்டுக் கழகம் மற்றும் டிஐபிஆர் இணைந்து முதல்முறையாக ஜம்மு காஷ்மீரில் திரைப்பட விழா நடத்துகிறது. இந்த விழாவில் திரையிட இதுவரை 50க்கும் அதிகமான நாடுகளில் இருந்து 875 படங்கள் அனுப்பப்பட்டுள்ளன.

Advertisement

Advertisement

இந்தத் திரைப்பட விழா நான்கு நாள்களாக நடைபெற இருக்கின்றது. இதில் கலந்துரையாடல், மாஸ்டர்கிளாஸ், கலாச்சார ஈடுபாடுகள், மாணவர்கள் மற்றும் இளம் படைப்பாளிகளுக்கும் சினிமா ஆர்வர்களுக்கும் புதிய வாய்ப்புகளையும் பெற இந்த விழா உதவுமெனக் கூறப்படுகிறது.

இந்தத் திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகளை ஆய்வு செய்த ஜம்மு காஷ்மீர் முதல்வரின் அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது:

வரும் செப்.7-10 வரை ஜம்மு காஷ்மீரில் நடைபெற இருக்கும் அறிமுக பன்னாட்டு திரைப்பட விழாவுக்கான ஏற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

இந்த விழாவில் திரையிடல், இளம் படைப்பாளிக்கான மாஸ்டர்கிளாஸ், கலாசார செயல்பாடுகள் அடங்கியிருக்கும்.

ஜம்மு காஷ்மீர் முதல்வர் நமது மாநிலத்தில் உயர்ந்த கலாச்சார, தனிவகைச் சமையல், கைத்தறி ஆடைகள், சிறப்பான சுற்றுலாத் தளங்கள் என முக்கியமானவை இந்த விழாவில் காட்சிப்படுத்தப்படுமெனக் கூறியுள்ளார். சரியான திட்டமிடலுடன் சீரான ஒத்துழைப்புடன் இந்த அறிமுக திரைப்பட விழாவை நடத்த தயாரிப்புகளை உருவாக்கியதாகவும் கூறியுள்ளார்.

summary

Omar Abdullah reviews preparations for maiden International Film Festival of Jammu and Kashmir

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments