FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
செய்திகள்

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ரிஷப் ஷெட்டிக்கு விருது!

இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு திரைப்பட விழாவில் வழங்கப்படவிருக்கும் விருது குறித்து...

Updated On : 29 ஜூலை 2026, 7:51 pm IST
ரிஷப் ஷெட்டி - படம்: இன்ஸ்டா / ரிஷப் ஷெட்டி
பகிர்:

இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டிக்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவில் ‘திரைப்படத்தில் தலைமைத்துவம்’ - லீடர்ஷிப் இன் சினிமா (Leadership in Cinema) என்ற விருது வழங்கி கௌரவப்படுத்தவிருக்கிறார்.

கர்நாடகத்தைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி நடிகர் மட்டுமில்லாமல், திரைக்கதை ஆசிரியர், இயக்குநராக கவனம் பெற்று வருகிறார். காந்தாரா திரைப்படத்தின் மூலம் இந்தியா மட்டுமில்லாமல் உலக அளவில் கவனம் ஈர்த்துள்ளார்.

மெல்போர்ன் இந்திய திரைப்பட விழா வரும் ஆகஸ்ட் மாதம் நடைபெற இருக்கிறது. இதில் 36 மொழிகளில் 130க்கும் அதிகமான படங்கள் திரையிடப்பட இருக்கின்றன. இதில் நடுவராக ரிஷப் ஷெட்டி கலந்துகொள்ளவிருக்கிறார்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், ரிஷப் ஷெட்டிக்கு மெல்போர்ன் இந்திய திரைப்பட விழாவின் மிக உயரிய விருதான 'திரைப்படத்தில் தலைமைத்துவம்’ - லீடர்ஷிப் இன் சினிமா என்ற விருது வழங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

உள்ளூர் கலாசாரத்தை உலக அளவில் கொண்டு சென்றதற்காகவும் திரைக்கதை, இயக்கம், நடிப்பு என அசத்தியவற்றுக்காகவும் இந்த விருது ரிஷப் ஷெட்டிக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து ரிஷப் ஷெட்டி, ”இந்த விருதைப் பெறவிருப்பதில் மிகுந்த கௌரமாகவும் கருதுகிறேன். கதை சொல்லல் என்பது நமக்கு உத்வேகம் அளித்த நமது கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் கொண்டாடும் விதமாகவே இருக்கிறது.

நமது பாரம்பரியம் மிகுந்த உள்ளூர் கதைகள் உலக அளவில் பொருந்தும்படி இருப்பது மிகவும் வியக்கத்தக்க அர்த்தமாக இருக்கிறது. மெல்போர்ன் செல்லவும் மற்ற திரைப்பட கலைஞர்கள் மற்றும் ரசிகர்களுடன் இணைந்து கொண்டாட ஆவலுடன் காத்திருக்கிறேன் என்றார்.

summary

Rishab Shetty to be honoured at Indian Film Festival of Melbourne with Leadership in Cinema award

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments